Word |
English & Tamil Meaning |
|---|---|
| எருக்கொடு - த்தல் | eru-k-koṭu- v. intr. <>எரு+. See எருக்கழித்துக்கொடு-. Loc. . |
| எருகு - தல் | eruku- 5 v. intr. <>id. To have loose mations, used with reference to cattle; மாடு கழிதல். மாடு எருகியிருக்கிறது. Colloq. |
| எருச்சாட்டி | eru-c-cāṭṭi n. <>id.+prob. <>சார்த்து - Land not manured during the present year, having been enriched previously; எருவிட்ட நிலம். (யாழ். அக.) |
| எருச்சாம்பல் | eru-c-cāmpal n. <>id.+. Ashes of cowdung fuel; எருமுட்டைச்சாம்பல். Colloq. |
| எருத்தடி | eruttaṭi n. <>எருத்து+அடி. (Pros.) Penultimate line of a verse; ஈற்றயலடி. குட்டமெருத்தடி யுடைத்து மாகும் (தொல். பொ. 428). |
| எருத்தம் | eruttam n. <>id. 1. Neck; கழுத்து. எருத்த மிடங்கோட்டி (சீவக. 1658). 2. Nape, back of the neck; 3. Member of kali verse. See தரவு. (வீர சோ. யப். 11, உரை). 4. Penultimate; |
| எருத்தன் | eruttaṉ n. <>எருது. Man who is as strong as a bull; காளைபோல் வலியவன். மலையைக் கையா லெருத்தனா யெடுத்தவாறே (தேவா.) |
| எருத்து | eruttu n. [T. aṟṟu.] 1. Neck; கழுத்து. எருத்துவலிய . . . இரலை (கலித். 15). 2. Member of kali verse. See தரவு. (தொல். பொரு. 444, உரை.) 3. Penultimate; |
| எருத்துக்காளை | eruttu-k-kāḷai n. <>எருது+. Steer; இளவெருது. (W.) |
| எருத்துத்திமில் | eruttu-t-timil n. <>id.+. Hump of a bull; மாட்டின் முசுப்பு. |
| எருத்துப்புரை | eruttu-p-purai n. <>id.+. Ox stall; மாட்டுக்கொட்டில். Tinn. |
| எருத்துப்பூட்டு | eruttu-p-pūṭṭu n. <>id.+. First ploughing on an auspicious day, when every one's team is employed and a few furrows are turned up; நல்லநாளில் முதலில் ஏர் பூட்டி உழுகை. (J.) |
| எருத்துமாடு | eruttu-māṭu n. <>id.+. 1. Bull, ox; எருது. (நன். 183, உரை.) 2. Pack-bullock; |
| எருத்துவாலன் | eruttu-vālaṉ n. <>id.+. A bird having a long tail; நீண்டவாலுள்ள ஒரு குருவி. (W.) |
| எருத்துவாற்குருவி | eruttu-vāṟ-kuruvi n. <>id.+. See எருத்துவாலன். (W.) . |
| எருதடி - த்தல் | erutaṭi- v. tr. <>id.+ அடி-. 1. To plough; உழுதல். 2. To thresh out grain by making cattle tread over the stalks; |
| எருதாண்டிமாடு | erutāṇṭi-māṭu n. <>id.+ ஆண்டி+. Trained ox, so called from its being owned and used in shows by itinerant beggars; பெருமாள்மாடு. Loc. |
| எருது | erutu n. [T. eddu, K. ettu, M. erutu.] 1. Bull, ox, steer; இடபம். நல்லெருது முயலும் (பதிற்றுப். 27, 13). 2. Taurus, the second sign of the zodiac; |
| எருதுகட்டி | erutu-kaṭṭi n. <>id.+. Bull-baiter; சல்லிக்கட்டில் எருத்தை மடக்குவோன். (G. Sm. D. i, ii, 54.) |
| எருதுகட்டு | erutu-kaṭṭu n. <>id.+. Bullbaiting festival. See சல்லிக்கட்டு. Loc. . |
| எருதுமறி - த்தல் | erutu-maṟi- v. tr. <>id.+. To cover a cow, as a bull; எருதுபொலிதல். (J.) |
| எருந்தி | erunti n. A kind of small sheel; இப்பி. (மூ. அ.) |
| எருந்து | eruntu n. [M. erundu.] Bivalve sheel fish, as mussels, oysters; கிளிஞ்சில். முத்தம் . . . எருந்தின் வயிற்றகத் தடக்கி (சிறுபாண். 58). |
| எருப்போடு - தல் | eru-p-pōṭu- v. intr. <>எரு+. 1. To manure land; உரமிடுதல். 2. To pass excrement, as cattle; |
| எருமணம் | eru-maṇam n. prob. எறி1-+மணம். Red Indian water-lily, Nymphaea lotus rubra; செங்குவளை. (பிங்.) |
| எருமன்றம் | eru-maṉṟam n. <>எரு+. Open, gathering place for cattle; மாடுகள் கூடு மிடம். ஆயர்பாடியி லெருமன்றத்து (சிலப். 17, உரைப் பாட்டு). |
| எருமுட்டை | eru-muṭṭai n. <>id.+. Dried cowdung-cake used as fuel; வறட்டி. எருமுட்டை பிட்கி னுதிர்ந்திடும் (பட்டினத். திருப்பா. பொது. 51). |
| எருமுட்டைப்பீநாறி | eru-muṭṭai-p-pīnā-ṟi n. <>id.+. Malabar catmint. See வெதுப்படக்கி. (மலை.) . |
| எருமை | erumai n. [T. enumu, K. emme, M. eruma, Tu. erme.] 1. Buffalo; குவிமுலை படர்மருப் பெருமை (சீவக. 2102). 2. (Purap.) Theme of unyielding resistance. See எருமைமறம். ஒருவனொருவனை யுடைபடைபுக்குக் கூழைதாங்கிய வெருமையும் (தொல். பொ. 72). 3. Yama, who rides on a buffalo; |
| எருமைக்கடா | erumai-k-kaṭā n. <>எருமை+. He buffalo; ஆணெருமை. |
