Word |
English & Tamil Meaning |
|---|---|
| எய்த | eyta adv. <>எய்து-. 1. Carefully, well, adequately; நன்றாக. எனநினைத் தெய்த நோக்கி (கம்பரா. உருக்கா. 28). 2. Very much, abundantly, profusely; |
| எய்து - தல் | eytu- 5 v. [T. eyidu, M. eytu.] tr. 1. To approach; அணுகுதல். நெடியோயெய்த வந்தனம் (புறநா. 10). 2. To obtain, acquire, attain; 3. To reach, as a place; 4. To revere; 5. To leave, forsake; - intr. 1. To be adapted, suitable; 2. To happen, occur; 3. To appear, become, crop up; 4. To be suffficient, adequate; |
| எய்ப்பன்றி | ey-p-paṉṟi n. <>எய்3+. [T. edupandi, Tu, eyipanji.] Porcupine; முள்ளம் பன்றி. எய்ப்பன்றி முதுகுபோலும் (பெரும்பாண். 88, உர்ரை). |
| எய்ப்பில்வைப்பு | eyppil-vaippu n. <>எய்ப்பு+. That which is laid by to be of use in a time off adversity; இளைத்தகாலத்தில் உதவுதற்காக வைக்கப்படும் சேமப்பொருள். அப்பாவென் னெய்ப்பில் வைப்பே யாற்றுகிலேன் (தாயு. பராபர. 25). |
| எய்ப்பினில்வைப்பு | eyppiṉil-vaippu n. <>id.+. See எய்ப்பில்வைப்பு. நல்லடியார்மனத் தெய்ப்பினில்வைப்பை (தேவா. 818, 2). |
| எய்ப்பு | eyppu n. <>எய்4-. 1. Weariness, languor; இளைப்பு. எய்ப்பானார்க் கின்புறு தேனளித்து (தேவா. 189, 3). 2. Time off adversity; |
| எய்ப்போத்து | ey-ppōttu n. <>எய்3+. Male porcupine; ஆண் முள்ளம்பன்றி. கற்கந்தும் எய்ப்போத்தும் . . . அனையார் (இறை. 2, உரை, பக். 27). |
| எய்ம்மான் | ey-m-māṉ n. <>id.+. See எய்ப்பன்றி. எயினர் தந்த வெய்ம்மா னெறிதசை (புறநா. 177, 13). |
| எய்யாமை | eyyāmai n. <>எய்4-+ neg.+. Ignorance; அறியாமை. (தொல். சொல். 342.) |
| எயில் | eyil n. prob. எய்1-+இல். 1. Fortress, wall, fortification; மதில். திருந்தெயிற் குடபாற்சிறுபுழை போகி (மணி. 6, 22). 2. City, town; |
| எயிற்றம்பு | eyiṟṟampu n. <>எய்று + அம்பு. Arrow tipped with a spear-head; அலகம்பு. எயிற்றம்பு மூழ்கலின் (சீவக. 780). |
| எயிற்றி | eyiṟṟi n. <>எயின். Woman of the eyiṉ caste; எயினச்சாதிப்பெண். சுருங்க ணெயிற்றி (புறநா. 181). |
| எயிற்றுவலி | eyiṟṟu-vali n. <>வயிறு+. Gum-boil; பல்ல¦று வளர்தலாலுண்டாகும் நோவு. Loc. |
| எயிறதைப்பு | eyiṟ-ataippu n. <>id.+ அதை-. Inflammation of the gums of the teeth; பல்லின் அடிவீக்கம். (தைலவ. தைல. 44.) |
| எயிறலை - த்தல் | eyiṟalai- v. intr. <>id.+ அலை2-. To gnash the teeth in anger; சினத்தாற் பல்லைக்கடித்தல். ஆவனகூறி னெயிறலைப்பான். (நீதிநெறி. 30). |
| எயிறு | eyiṟu n. [M. eyiru.] 1. Tooth; பல். முல்லையலைக்குமெயிற்றாய் (நாலதி, 287). 2. The gums; 3. Tusk of the elephant, of the wild hog; |
| எயிறுதின்(னு) - தல் | eyiṟu-tiṉ- v. intr. <>id.+. To gnash the teeth in anger; சினத்தாற் பல்லைக்கடித்தல். எயிறுதின்று வைது (பாரத. நிவாத. 115). |
| எயின் | eyiṉ n. prob. எய்1-. Hunting tribe of the desert tract; வேடச்சாதி. எயினிடு கடனிது (சிலப். 12, பாடல், 18, 'அணிமுடி.'). |
| எயின்சேரி | eyiṉ-cēri n. <>எயின்+. Village inhabited by the hunting tribes; வேடரூர் எயின்சேரியினுள்ள மாதர். (கந்தபு. வள்ளி. 28). |
| எயினச்சேரி | eyiṉa-c-cēri n. <>id.+. See எயின்சேரி. (நன். 212, விருத்.) . |
| எயினன் | eyiṉaṉ n. <>id. Hunter, inhabitant off the desert tract; வேடன். கோடுவிலெயினர் குறும்பில் (பெரும்பாண். 129). |
| எரங்காடு 1 | eraṅ-kāṭu n. prob. <>இறங்கு-+ காடு. Barren land; பாழ்நிலம். Loc. |
| எரங்காடு 2 | eraṅ-kāṭu n. prob. T. erra+. Fertile land of red loam soil; fertile black cotton soil; பருத்தி விளைதற்குரிய செழித்த புன்செய் நிலம். Cm. |
