Word |
English & Tamil Meaning |
|---|---|
| எரியவிழி - த்தல் | eriya-viḻi- v. tr. <>id.+. See எரிவிழி-. . |
| எரியாடி | eri-y-āṭi n. <>எரி+. šiva, who dances with flaming fire in hand; அழலை யேந்தியாடுபவராகிய சிவன். எரியாடி தென்றில்லை (திருக்கோ. 127.) |
| எரியூட்டு - தல் | eri-y-ūṭṭu- v. tr. <>id.+. To set fire to; தீக்கொளுத்துதல். இலங்கை யெரி யூட்டுபடலம் (கம்பரா.). |
| எரியோம்பு - தல் | eri-y-ōmpu- v. intr. <>id.+. To make offerings in the consecrated fire; அக்கினிகாரியஞ் செய்தல். கற்றாங்கெரியோம்பி (தேவா. 1, 1). |
| எரியோன் | eriyōṉ n. <>id. Agni the god of fire; அக்கினிதேவன். ஒள்ளெரியோனு மொளித்தான் (கம்பரா. இலங்கையெரி. 64). |
| எரிவண்டு | eri-vaṇṭu n. <>எரி2-+. 1. Spanish fly, cantharides; எரிப்புண்டாக்கும் வண்டு. (கால். வி. 111.) 2. An insect which strikes against the eyeball causing severe smarting; |
| எரிவந்தம் | eri-vantam n. Dial. var. of எரிபந்தம். (W.) 1. Burning sensation; எரிச்சல். 2. Anger, wrath; |
| எரிவளர்ப்போர் | eri-vaḷarppōr n. <>எரி+. Brāhmans, who keep alive the consecrated fire by daily offering; பார்ப்பார். (பிங்.) |
| எரிவனம் | eri-vaṉam n. <>எரி2-+. Cremation ground; சுடுகாடு. (திவா.) |
| எரிவிரியன் | eri-viriyaṉ n. <>id.+. Kind of viper, the bite of which causes burning pain; கடித்தலினால் எரிச்சலையுண்டாக்கும் விரியன்பாம்பு வகை. |
| எரிவிழி - த்தல் | eri-viḻi- v. tr. <>எரி+. To glare at fiercely with blazing eyes; கோபித்துப் பார்த்தல். தானவனை . . . அரியுருவமாகி யெரிவிழித்து (திவ். இயற். பெரியதிரும. 100). |
| எரிவிளக்குறு - த்தல் | eri-viḷakkuṟu- v. tr. <>id.+. To punish a condemned culprit by compelling him to go around the town with a burning lamp over his head; நடைவிளக்கெரித்துத் தண்டித்தல். எரிவிளக் குறுக்கு நம்மை (சீவக. 1162). |
| எரிவு | erivu n. <>எரி1-. 1. Burning; எரிகை. 2. Heat in the system; burning, as of the eyes, hands, feet, etc.; 3. Envy, jealousy; 4. Anger, wrath; |
| எரு | eru n. [T. eruvu, K. erubu.] 1. Animal or vegetable manure; உரம். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037). 2. See எருமுட்டை. 3. Excrement; |
| எருக்கட்டு 1 - தல் | eru-k-kaṭṭu- v. tr. <>எரு+. 1. To fold sheep, herd cattle for manure, keep cattle panned in a field that they might manure it; கிடைவைத்தல். 2. To collect dung; |
| எருக்கட்டு 2 | eru-k-kaṭṭu n. <>id.+. (W.) 1. Folding of sheep and herding of cattle for manure; உரத்திற்காக கிடைவைக்கை. 2. Land thus manured; |
| எருக்கலகாம்போதி | erukkala-kāmpōti n. <>K. erakalakambōdi. Dial. var. of எதுகுலகாம்போதி. (W.) . |
| எருக்கழித்துக்கொடு - த்தல் | eru-k-kaḻittu-k-koṭu- v. intr. <>எரு+. To confirm a contract for the sale of cattle, the vendor taking a small quantity of straw in hand, putting some cowdung on it and presenting it to the purchaser; வைக்கோலில் சாணியிட்டுக்கொடுத்து மாட்டுவிற்பனையை உறுதிப்படுத்துதல். Loc. |
| எருக்களம் | eru-k-kaḷam n. <>id.+. Site set apart for a dunghill; எருவிடுமிடம். |
| எருக்கிலமஞ்சி | eru-k-kilamaci n. <>எருக்கு+இலை+ prob. maugī. Madar fibre; எருக்கநார். |
| எருக்கிலைமணி | erukkilai-maṇi n. <>id.+. Necklace worn by Parava women; பரவமகளிர் பூணுங் கழுத்தணிவகை. |
| எருக்கிலைமாலை | erukkilai-mālai n. <>id.+ See. எருக்கிலைமணி. . |
| எருக்கு 1 | erukku n. prob. arka. [M. errikku.] Yarcum, madar, m. sh., Calotropis gigantea; செடிவகை. எருக்கின் முகிழ்நோக்கும் (தணிகைப்பு. களவு. 274). |
| எருக்கு 2 - தல் | erukku 5 v. tr. 1. To kill; கொல்லுதல். (திவா.) 2. To harass, trouble; 3. To cut, hew; 4. To beat, as a drum; 5. To strike, as a bush; 6. To destroy; 7. To lay a burden upon; 8. To produce sound on a musical instrument of percussion; |
| எருக்குரல் | erukkural n. <>எருக்கு-+குரல். Sound produced by beating, as a drum; தாக்குதலாலுண்டாகும் ஒலி. இன்கட் பம்பை யெருக்குரலுறீஇ (பெருங். மகத. 26, 36). |
