Word |
English & Tamil Meaning |
|---|---|
| எதிரேற்றம் | etir-ēṟṟam n. <>id.+. Going against the current; பெருக்குக்கு எதிரேறிச் செல்லுகை. எதிரேற்றங் கொண்ட பாடல் (சேதுபு. திருநா.5). |
| எதிரேற்றல் 1 | etir-ēṟṟal n. <>எதிர்3+. Advancing towards a party to welcome them; எதிர்கொள்ளுகை. |
| எதிரேற்றல் 2 | etir-ēṟṟal n. <>எதிர்1+. 1. Attacking, opposing, resisting; எதிர்த்து நிற்கை. 2. Interposing and receiving on one's own person, as the weapons discharged against another by a foe; 3. Counteracting, as evil by magic; |
| எதிரேற்று | etir-ēṟṟu n. <>id.+. See எதிர்ரேவல், 1. (W.) . |
| எதிரேறு | etir-ēṟṟuetir-ēṟšu n. <>id. +. Strength power; வலி. எங்க ளெதிரேறழிய (பெரியபு. திருநா. 121.) |
| எதிரொலி 1 - த்தல் | etir-oli- v. intr. <>id.+. To echo, reverberate; பிரதித்தொனிசெய்தல். நீடுகுன் றெதிரொலிக்கவே (பாரத. வேத்திர. 10). |
| எதிரொலி 2 | etir-oli- n. <>id.+. Echo, reverberation of sound; பிரதித்தொனி. இவனுமப்பொழு தெதிரொலியென (பாரத. பதின்மூ. 88). |
| எது | etu interrog. pron. <>எ3. [T. edi, M. endu.] Which thing; யாது? |
| எதுக்களி - த்தல் | etukkaḷi- v. intr. See எதிர்க்களி- Vul. . |
| எதுகுலகாம்போதி | etu-kula-kāmpōti n. <>yadu-kula-kāmbōdhi. (Mus.) A speciffic melody-type; ஓர் இராகம். |
| எதுகுலம் | etu-kulam n. <>yadu+. Dynasty of king Yadu; யதுவமிசம். எதுகுலத் துதித்து (காஞ்சிப்பு. வாணி. 15). |
| எதுகை | etukai n. prob. எதிர்கை. 1. See எதுகைத்தொடை. எதுகைத்தொடை. இரண்டாம் . . . எழுத்தொன்றி னெதுகை (காரிகை, உறுப். 16). 2. Agreement, consonance; |
| எதுகைத்தொடை | etukai-t-toṭai n. <>எதுகை+. (Pros.) Concatenation in which the second letters of the lines of a verse or of some feet of the same line are either the same or corresponding assonant letters, a kind of 'rhyming,' one of five toṭai, q.v.; இரண்டாமெழுத் தொன்றிவரத் தொடுப்பது. (இலக். வி. 723.) |
| எதுவடம் | etu-vaṭam n. <>எருது+ Rope which fastens the yoke to the pole; எருதுகளை நுகத்தோடு சேர்க்குங் கயிறு. Rd. |
| எதேச்சையாக | etēccai-y-āka adv. <>yathā+icchā+. Agreeably to one's own sweet will and pleasure, without let or hindrance; விருப்பத்தின்படி. |
| எதேஷ்டமாய் | etēṣṭam-āy adv. <>id.+ iṣṭa+. 1. As much as could be wished for, in abundance; இஷ்டப்படி. 2. Abundantly; |
| எதோள் | etōḷ adv. <>எ3. Where; எவ்விடம். (தொல். எழுத். 398, உரை.) Obs. |
| எதோளி | etōḷi adv. See எதோள். (தொல். எழுத். 159, உரை.) Obs. . |
| எந்த | enta interrog. adj. <>எ3. [K. M. e.] Which, what. எந்தவெந்த வெஞ்சாயகம் . . . கொடுத்தார் (பாரத. பதினெட். 30). |
| எந்திரக்கிணறு | entira-k-kiṇaṟu n. <>yantra+. Well that is provided with a contrivance for throwing out water; நீரையிறைக்கும் பொறியையுடைய கிணறு. எந்திரக்கிணறு மிடுங்கற் குன்றமும் (மணி. 19, 112). |
| எந்திரகாரன் | entira-kāraṉ n. <>id.+. Mechanic; சூத்திரக்காரன். (W.) |
| எந்திரநாழிகை | entira-nāḻikai n. <>id.+. Machine which throws out water in sprays; ஒருவகை நீர்வீசுங் கருவி. எந்திர நாழிகை யென்றிவைபிறவும் (பெருங். உஞ்சைக். 41, 18). |
| எந்திரப்பொருப்பு | entira-p-poruppu n. <>id.+. An artificial mound or hillock on which are mounted various kinds of machines; பல் வகைப்பொறிகளமைந்த செய்குன்று. எண்ணரும் பல்பொறி யெந்திரப்பொருப்பும் (பெருங். நரவாண. 9, 28). |
| எந்திரம் | entiram n. <>yantra. 1. Engine, machine; சூத்திரப்பொறி. 2. Sugar-cane press; 3. Oil-press; 4. Chariot wheel; 5. Potter's wheel; 6. Engine or other machinerry of war mounted over the battlements of a fort; 7. Sticks for producing fire by drilling; 8. Mystical diagram, written on a palmyra leaf or drawn on metal and worn as a charm or amulet; |
| எந்திரவாவி | entira-vāvi n. <>id.+. Tank provided with machinery for filling and emptying water; யந்திரத்தால் நீர் வரவும்போகவும் அமைக்கப்பட்ட நீர்நிலை. எந்திர வாவியி லிளைஞரு மகளிரும் . . . ஆடிய (மணி. 28, 7). |
