Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| எதிர்ச்செறி - த்தல் | etir-c-ceṟi- v. tr. <>id.+. To dam up, as a flood; வெள்ளத்திற்கு எதிராக அணை கோலுதல். பெருக்காற்றை எதிர்ச்செறிக்க மாட்டாதாப்போலே (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 160).  | 
| எதிர்சம்பாவனை | etir-campāvaṉai n. <>எதிர்3+. Complimentary gift of courtesy to the bride's party by that of the bridegroom or vice versa on marriage occasions in return for gifts received; விவாகமுதலியகாலங்களிற் செய்யப்பட்ட சீர்க்குப் பிரதியுபசாரமாகச்செய்யும் சம்பாவனை.  | 
| எதிர்செலவு | etir-celavu n. <>id.+. Courteous advance to welcome any one; வரவேற்க முன்னெழுந்துசெல்கை. இருக்கை யெழலு மெதிர்செலவும் (நாலடி, 143).  | 
| எதிர்சோழகம் | etir-cōḻakam n. <>எதிர்4+. Wind that blows from due south; நேர் தெற்கிலிருந்து வீசுங்காற்று. (J.)  | 
| எதிர்த்தட்டு | etir-t-taṭṭu n. <>id.+. 1. Opposite scale pan in a balance; எதிர்ப்பக்கத்துத் துலாத்தட்டு. எழுகின்ற ஞாயிறொத்தான் குலதீபனெதிர்த்தட்டிலே (தமிழ்நா. 124). 2. That which is contrary, opposire;  | 
| எதிர்த்தலை | etir-t-talai n. <>id.+. See எதிர்த்தட்டு, 2. ஸ்நேஹமும் அதற்கு எதிர்த்தலையான த்வேஷமும் (ஈடு, 9, 1, 1).  | 
| எதிர்த்தவன் | etirttavaṉ n. prob. எதிர்2-. Kind of arsenic; பாஷாணவகை. (W.)  | 
| எதிர்த்துத்தா - [தரு]-தல் | etirttu-t-tā- v. tr. <>எதிர்2-+. To compensate, make up for; ஒத்துக்கொடுத்தல். தோற்றுப்படில் நாங்க ளெதிர்த்துத் தரக்கடவோம். (S.I.I. i, 104).  | 
| எதிர்த்துப்பேசு - தல் | etirttu-p-pēcu- v. <>id.+. tr. (Law.) To dispute, controvert, object to, plead against; -intr. To retort; to speak disobedidently; மாறுசொல்லுதல்.அடங்காமற்பேசுதல்.  | 
| எதிர்ந்தோர் | etirntōr n. <>எதிர்1-. Adversaries, opponents, combatants; பகைவர். (திவா.)  | 
| எதிர்நடை 1 | etir-naṭai n. <>எதிர்3+. Counter part of a document; மூலப்பிரதி. இப்பிரதி எதிர்நடை பார்த்தெழுதினது.  | 
| எதிர்நடை 2 | etir-naṭai n. <>எதிர்+. Acting perversely, taking an opposite course; மாறுபட்ட ஒழுக்கம். (W.)  | 
| எதிர்நடைக்கணக்கு | etir-naṭai-kkaṇakku n. <>எதிர்நடை1+. Register or account kept separately by each partner in a joint concern in order that the account maintained by every one of them may be examined by the other partners; கூட்டாளிகளின் தனிக்கணக்கு.  | 
| எதிர்நாள் | etir-nāḷ n. <>எதிர்4+. Nakṣatra whose influence has respect to movement and interests in the different points of the compass; எதிர்நோக்கு நட்சத்திரம். (W.)  | 
| எதிர்நிரனிறை | etir-niraṉiṟai n. <>id.+. (Gram.) Reversed sequence, a syntactical arrangement of a series of predicates in an order which is the reverse of that in which their respective nominatives stand; முறைமாறிவரும் நிரனிறை. (நன். 414, உரை.)  | 
| எதிர்நில்[ற்] 1 - த[ற]ல் | etir-nil - v. intr. <>எதிர்3+. To stand before; முன்னிற்றல். காகமானவை...ஒருகல்லின்முன் னெதிர்நிற்குமோ (தாயு. எங்கு. 6).  | 
| எதிர்நில்[ற] 2 - த[ற]ல் | etir-nil- v. <>எதிர்1+. intr. To be perverse, contumacious; To resist, withstand, oppose; மாறுபட்டுநிற்றல். (W.) -tr. எதிர்த்துநிற்றல். (நாலடி, 363.)  | 
| எதிர்நிலை 1 | etir-nilai n. <>id.+. Resistance, opposition; இகலிநிற்கை. (W.)  | 
| எதிர்நிலை 2 | etir-nilai n. <>எதிர்3+. Mirror; கண்ணாடி. (சங். அக.)  | 
| எதிர்நிலையணி | etir-nilai-y-aṇi n. <>எதிர்4+நிலை1+அணி. Figure of speech in which the usual form of comparison is inverted, the uvamāṉam being compared to the uvamēyam; உவமான உவமேயங்களை மாற்றிச்சொல்லும் அணி. (அணியி. 4.)  | 
| எதிர்நீச்சு | etir-nīccu n. <>id.+. 1. Swimming against the current; வெள்ளப்போக்கிற்கு எதிராக நீந்துகை. 2. Accomplishing a very difficult task; doing an up-hill work;  | 
| எதிர்நூல் | etir-nūl n. <>id.+. Refutatory work, one of four broad divisions of literary attempts; work containing fresh material and defending its own doctrines against those of others; தன்கோள்நிறீஇப் பிறன்கோள் மறுக்கும் நூல். (இறை. 1, பக். 12.)  | 
| எதிர்நோக்குநட்சத்திரம் | etir-nōkku-naṭcattiram <>id.+ நோக்கு-+. See எதிர்நாள். (W.) .  | 
| எதிர்ப்படு 1 - தல் | etir-p-paṭu- v. <>எதிர்3+. intr. To appear before; -tr. To meet, encounter; முன்தோன்றுதல். ஈசனெதிர்ப்படு மாயிடிலே (திருவாச. 49, 3). சந்தித்தல். எதிர்ப்பட்டாற் பின்னைவிடுமோ விறல்வீமன் (பாரத. பதினேழாம். 143).  | 
