Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாவணை | nāvaṇai, n. Corr, of நாலணை, Four pairs of oxen ; எருத்தின் நாலு ஜோடி. (W.) |
| நாவரசு | nā-v-aracu,. n. <> நா+. Tirunāvukkaracar. See திருநாவுக்கரசுநாயனார். மிளிர்தரு நாவரசே (சிவப். பிரபந். நால்வர். 34). |
| நாவரணை | nā-varaṇai, n. <>id.+ uraṇa. A kind of pimple or ulcer on the tongue; நாப்புற்றுநோய்வகை. |
| நாவரையர் | nā-v-araiyar, n. <>id. +. See திருநாவுக்கரசுநாயனார். தமிழின் செய்யுள்பாடு நாவரையர் புகழ்மொழிகள் (சேதுபு. கடவுள் வா.9). . |
| நாவல் | nāval, n. 1. Jaumoon-plum, 1. tr., Eugenia jambolana; மரவகை. நாவ றழீஇயவிந் நானிலம் (திருக்கோ. 191). 2. Arnott's mountain black plum, 1. tr. Eugenia arnottiana; 3. See நாவலத்தீவு. நாவலந் தண்பொழில் (மணி. 22, 29). 4. Challenging for fight; 5. A shout of victory in the form of nāvalō-nāval; 6. A shout of joy made while heaping grain on the threshing-floor; 7. A shout of driving the oxen while treading sheaves on the threshing-floor; 8. Exclamation of grief; 9. A kind of insect which blights the gingelly crops; |
| நாவல்கூறு - தல் | nāval-kūṟu, v. intr. <>நாவல்+. To shout nāvalō-nāval; நாவலோ நாவலென்று சொல்லுதல். விளியும் பண்டமாற்றும் நாவல் கூறலும் (யாப். வி. பக்.45). |
| நாவல்நெல் | nāval-nel, n. prob. id. +. A kind of paddy நெல்வகை . (A.) |
| நாவலகலிடம் | nāval-akal-iṭam, n. <>id. +. See நாவலந்தீவு. நாவலகலிடத்து ஞாயிறனையனாய் (பு. வெ. 8, 17). . |
| நாவலந்தீவம் | nāval-an-tivam, n. <>id. +. See நாவலந்தீவு. நாவலந்தீவம் போற்றி (திருவாலவா. கடவு.8). . |
| நாவலந்தீவு | nāval-an-tīvu, n.<>id. +. The central annular continent surrounded by the ocean of salt-water, one of eḻu-tīvu, q. v.; ஏழுதீவுகளுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு. நாவலந் தீ வாள்வாரே நன்கு (ஏலாதி, 56). |
| நாவலம்புவி | nāval-am-puvi, n. <>id. +. See நாவலந்தீவு. நாவலம்புவிமன்னர் வந்து வணங்க (திவ். பெரியதி. 9, 10, 6). . |
| நாவலர் | nā-valar, n. <> நா+வன்-மை. 1. Poets, orators, the learned; புலவர். செந்நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை யுறைவாய் (திருவாச. 34, 1). 2. Ministers; 3. The Brahmins; |
| நாவலர்கோன் | nāvalar-kōṉ, n. <> நாவலர்+. See நாவலூராளி. (பெரியபு. திருமலை. 17.) . |
| நாவலூராளி | nāval-ūr-āḷi, n. <> நாவலூர்+. The šaiva Saint Cuntarar, a native of Nāvalūr; [நாவலூரினர்] சுந்தரர். நாவலூராளி நம்பி வன்றொண்டன் (தேவா. 942, 10). |
| நாவலோ | nāvalō, n. See நாவலோநாவல். (நன். 101, உரை) . |
| நாவலோநாவல் | nāvalō-nāval, n. See நாவல், 5, 6. நாவலோ நாவலென நாடறிய முறையிட்ட (ஏரெழு. 59). . |
| நாவழி | nā-vaḻi, n. <> நா+வழி-. Tongue-scraper; நாக்குவழிக்குங் கருவி. பொன்னா வழியாற் புகழ் நாவழித்து (சீவக. 3045) . |
| நாவற்பொழில் | nāvaṟ-poḻil, n. <> நாவல் +. See நாவலந்தீவு. பூமலி நாவற் பொழிலகத்து (பு.வெ. 9, 38). . |
| நாவறட்சி | nā-vaṟatci, n. <>நா+. Thirst as causing dryness of the tongue; தாகம் . |
| நாவறளை | nā-vaṟaḷai, n. cf. நாவரணை. See நாப்புற்று. (யாழ். அக.) . |
| நாவாசித்தி 1 | nāvācitti, n. prob. நா+asiddhi. See நாவூறு. (யாழ். அக.) . |
| நாவாசித்தி 2 | nāvā-citti, n. prob. id.+வாய்+siddhi. See நாவாய்ச்சித்தி. (யாழ். அக.) . |
| நாவாதி | nāvāti, n. Downy-nerved olive linden. See உருத்திராட்சம். Aṉaimalai. . |
| நாவாய் 1 | nāvāy, n. Blighted grain; உள்ளீடற்ற கதிர். Loc. |
| நாவாய் 2 | nāvāy, n. <> nau. 1. Vessel, ship; மரக்கலம். முந்நீர் வழங்கு நாவாய் போலவும் (புறநா. 13). 2. The 27th nakṣatra. 3. See நாவாய்ப்பறை. பறை நாவாய் (இலக். வி. 392, உரை). |
| நாவாய்ச்சித்தி | nā-vāy-c-citti, n. <>நா+வாய்+. Influence superstitiously attributed to words of some persons; வாக்குச்சித்தி. (W.) |
