Word |
English & Tamil Meaning |
|---|---|
| நால்கு | nālku, n. <>நால். [T. nālugu, K. nālku.] The number four; நான்கு. வாலுளைப்புரலி . . . நால்குடன் பூட்டி (பெரும்பாண். 489). |
| நால்வகைச்சாந்து | nāl-vakai-c-cāntu, n. <>id.+வகை+. The four kinds of sandal unguents, viz., kalavai, pītam, puli, vaṭṭikai; கலவை. பீதம், புலி, வட்டிகை என்ற நால்வகையாகிய சாந்து. (திவா.) |
| நால்வகைத்தேவர் | nāl-vakai-t-tēvar, n. <>id.+id.+. (Jaina.) The four-kinds of gods, viz., pavaṇar, viyantarar, jōtiṣkar, kalpavāciyar; பவணர், வியந்தரர், ஜோதிஷ்கர், கல்பவாசியர் என்ற நால்வகையான தேவர்கள். (மேருமந்.8. உரை.) |
| நால்வகைத்தோற்றம் | nāl-vakai-t-tōṟṟam, n. <>id. + id. +. The four modes in the genesis of life, viz., aṇṭacam, cuvētacam, uṟpiccam, carāyucam; அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்ற நால்வகை உயிர்த்தோற்றம் |
| நால்வகைப்பூ | nāl-vakai-p-pū, n. <>id. + id. +. The four kinds of flowers, viz., kōṭṭu-p-pū, koṭi-p-pū, nīr-p-pū, putaṟ-pū or nila-p-pū; கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்பபூ, புதற்பூ அல்லது நிலப்பூ என்ற நால்வகையான மலர். (திவா.) |
| நால்வகைப்பொருள் | nāl-vakai-p-poruḷ, n. <>id. + id. +. The four kinds of puruṣārtha, viz., aṟam, poruḷ, iṉpam, vīṭu; அறம். பொருள், இன்பம் வீடு என்ற நால்வகையான புருஷார்த்தம். (சூடா.) |
| நால்வகையுணவு | nāl-vakai-y-uṇavu, n. <> id. + id. +. The four kinds of food, viz., uṇṭal, tiṉṟal, nakkal, parukal; உண்டல், தின்றல் நக்கல். பருகல் என நான்குவகையான உணவு. (சூடா.) |
| நால்வகைவருணம் | nāl-vakai-varuṇam, n. <>id. + id. +. The four castes of the Hindus, viz., pirāmaṇaṉ, kṣattiriyaṉ, vaiciyaṉ, cūttiraṉ; பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்குசாதி, நெறிமுறை நால்வகை வருணமு மாயினை (திவ். இயற். திருவெழு. 29). |
| நால்வர்நான்மணிமாலை | nālvar-nāṉmaṇi-mālai, n. <> நால்வர்+நால்+. A poem by Civappirakāca on the four šaiva saints, Campantar, Appar, Cuntarar and Māṇikkavācakar; சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற சிவனடியார்கண்மேல் சிவப்பிரகாசர் இயற்றிய பிரபந்தம். |
| நால்வாய் | nāl-vāy, n. <> நால்-+. 1. Hanging mouth or jaw; தொங்கும் வாய், நால்வாய்க் கரி (திருக்கோ. 55). 2. Elephant; |
| நால்வாயன் | nālvāyaṉ, n. <> நால்வாய். 1. Gaṇēša as elephant-like; [ யானை முகத்தினன்] விநாயகன். ஒரு கோட்டன் . . . நால்வாயன் (சி. சி. காப்பு). (அக. நி.) 2. Indra, as having an elephant; |
| நாலடி | nāl-aṭi, n. <> நால்+. See நாலடியார். நாலடி நான்மணி நானாற்பது (தனிப்பா.). . |
| நாலடிநானூறு | nālaṭi-nāṉūṟu, n. <>நாலடி+. See நாலடியார். அளவினாற் பெயர்பெற்றன . . . நாலடிநானூறு முதலாயின (நன். 48, மயிலை.). . |
| நாலடியார் | nālaṭiyār, n.<>id. A Tamil classic treating of virtue, wealth and love, being a collection of 400 veṇpās or quatrains composed by Jaina ascetics, one of patiṉ-eṇkīḻkkaṇakku, q.v.; பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாயதும் சைனமுனிவர்களால் இயற்றப்பட்டதும் அறம்பொருள் இன்பம் இவற்றை 400 வெண்பாக்களாற் கூறுவதுமாகிய நூல் . |
| நாலம்பலம் | nāl-ampalam, n. <> நால்+. A portion of a temple; கோயிலுள் ஒரு பகுதி . Nā. |
| நாலல் | nālal, n. perh. நால்-. Yellow-flowered silk-cotton. See தணக்கு. (L.) |
| நாலறிவுயிர் | nāl-aṟivuyir, n. <> நால்+அறிவு+ உயிர். Living creatures having the four senses of taste, sight, touch and smell, as crabs, beetles; சுவை, ஒளி, ஊரு, நாற்றம் என்ற நான்கறிவுடைய நண்டு தும்பி முதலியன (தொல்.போ.598.)) |
| நாலா 1 | nālā, adj. <>நால். Many; பல. நாலாபக்கமும். |
| நாலா 2 | nālā, n. <>U. nālā. (W.) 1. Water channel; water-course; வாய்க்கால். 2. Ravine; |
| நாலாஞ்சடங்கு | nāl-ā-caṭaṅku, n. <>நால் +ஆ-+. See நாலாநீர். . |
| நாலாநீர் | nālā-nīr, n. <> id. + id. +. 1. Bath taken by a newly married pair on th fourth day of marriage; விவாகத்தின் நான்காநாள் மணமக்கள் புரியும் நீராட்டாச்சடங்கு. 2. The fourth day of marriage; |
| நாலாநீராடு - தல் | nālā-nīr-āṭu-, v. intr. <>id+id+. To take a purificatory bath on the fourth day after menstruation; நாலாநாள் இருது ஸ்நானஞ் செய்தல். நாலாநீராடி வந்தாள் (கொக்கோ.) . |
| நாலாம்பாதகன் | nāl-ām-pātakaṉ, n. <>id.+. Murderer, as one who commits the fourth in paca-mā-pātakam; கொலைப்பாதகன். நன்றென வுவந்து நாலாம் பாதக னதற்கு நேர்ந்தான் (திருவிளை.அங்க.12) . |
