Word |
English & Tamil Meaning |
---|---|
நாலாம்பொய்யுகம் | nāl-ām-poy-yukam, n. <>id. +. Kaliyuga; கலியுகம். செம்பொன்மேனிவேறாகி நாலாம்பொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துருவாகி மன்னும் (திருவிளை. இரச.30) . |
நாலாம்வருணம் | nāl-ām-varuṇam, n.<>id. +. The Sūdra caste, as the fourth varna; சூத்திரசாதி. |
நாலாமுறைக்காய்ச்சல் | nālā-muṟai-k-kāyccal, n. <>id. +. Malaria, quartan. See சாதுர்த்திகம். |
நாலாயிரப்பிரபந்தம் | nālāyira-p-pirapantam, n. <> நாலாயிரம்+. A collection of 4,000 Vaiṣṇava hymns in Tamil by Aḻvārs; ஆழ்வார்கள் அருளிச்செயல்களாய் 4, 000 பாடல் கொண்ட நூற்றொகுதி . |
நாலாயிரம் | nāl-āyiram, n. <> நால்+. See நாலாயிரப்பிரபந்தம். நாதனுக்கு நாலாயிர முரைத்தான் வாழியே (வாழித்திருநாமம்). . |
நாலாரச்சக்கிரம் | nāl-āra-c-cakkiram, n. <>id. +. A kind of cittira-kavi; சித்திரகவிவகை. (மாறனலங்.282, உரை.) |
நாலாவான் | nāl-āvāṉ, n. <>id. +. 1. The fourth man; நான்காமவன். 2. The Sūdra, as belonging to the fourth varṇa; |
நாலி | nāli, n. <> நால்-. 1. Rag; கந்தைதுணி. Loc. 2. Malabar glory-lily. 3. Pearl; |
நாலிகம் 1 | nālikam, n. <>nālika. 1. Lotus; (மூ.அ.) தாமரை. 2. Buffalo; |
நாலிகம் 2 | nālikam, n. <>nāli-jaṅgha. Crow; காகம். (மூ. அ.) |
நாலிகை | nālikai, n prob. nālika. Bamboo; மூங்கில். (சங். அக.) |
நாலு | nālu, n. <> நால்+. 1. [Tu. nālu.] The number four; நான்கு. 2. Many manifold; 3. A few; 4. See நாலடியார். ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலுமிரண்டுஞ் சொல்லுக்குறுதி. |
நாலுகட்டு | nālu-kaṭṭu, n. <>நாலு+. The central portion of a house surrounded with verandas on all sides; நாற்புறமும் சுற்றுக்கட்டுத்திண்ணை கொண்ட வீட்டின்பகுதி. Nā. |
நாலுகவிப்பெருமாள் | nālu-kavi-p-perumāḷ, n.<>id. +. Tirumaṅkai-y-āḻvar, as preeminent in the four kinds of verses; [நால்வகைக்கவியிலும் வல்லவர்] திருமங்கையாழ்வார். (குருபரம்.) |
நாலுசதுரக்கமலம் | nālu-catura-k-kamalam, n. <>id.+. A lotus-shaped mystic centre situated above the generative organ. See முலாதாரம். நாலு சதுரக்கமல முற்றின் (திருப்பு. 399). |
நாலுத்தட்டு | nālu-t-taṭṭu, n. See நாலுதட்டு. Nā. . |
நாலுதட்டு | nālu--taṭṭu, n. <> நால்+. A kind of woman's ornament . See ஞாலித்தட்டு. Nā. |
நாலுபாதசைவம் | nālu-pāta-caivam n. <>நாலு+. (šaiva.) A šaiva doctrine that the initiate should pass successively through cariyai, kiriyai, yōkam and nāṉām stages and thence obtain mōkṣam, one of sixteen caivam, q. v.; சைவம் பதினாறனுள் சரியை கிரியை யோகங்களால் ஞானமடைந்து பின் ஆன்மா வீடுபெறும் என்று கூறும் மதபேதம். |
நாலுமா | nālu-mā, n. <>id. +. The fraction 1/5, as four mā; ஐந்திலொன்றைக் குறிக்கும் கி என்னும் பின்னவெண். |
நாலுமூலைக்கப்பு | nālu-mūlai-k-kappu, n. <>id. +. See நாலுமூலைத்தாய்ச்சி. Loc. . |
நாலுமூலைத்தாய்ச்சி | nālu-mūlai-t-tāycci, n.<>id. +. A girls' play; மகளிர் விளையாட்டுவகை. |
நாவசை - த்தல் | nā-v-acai-, v. intr. <> நா+. To speak, utter a word as moving one's tongue; பேசுதல். நாவசைக்க நாடசையும். |
நாவடக்கம் | nā-v-aṭakkam, n. <> id.+. [M. nāvaṭakkam.] 1. Silencing one by magic; மந்திரத்தால் வாயைப் பேசவொட்டாமற் செய்கை. 2. Reserve, silence; |
நாவடம் | nāvaṭam, n. <> nāga+. Loc. 1. A pendent ear-ornament. See நாகவடம். 2. A jewel worn along with the marriage-badge; |
நாவடை | nā-v-aṭai, n.<> நா+அடு-. Place near a well where the baling bucket is emptied; கிணற்றில் இறைப்பவன் நீர்ச்சாலைச் சாய்க்கும் இடம். Loc. |
நாவடைத்துப்போ - தல் | nā-v-aṭaittu-p-pō-, v. intr. <> id. +. To become speechless, dumbfounded; பேசமுடியாமற்போதல் . |
நாவணம் | nā-v-aṇam, n. <>id+ அண்ணம். Uvula; உண்ணாக்கு. (W.) |