Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாகதீஸ்வரி | vākatīšvari n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
| வாகனக்கவி | vākaṉa-k-kavi n. <>வாகனம்+. Stanza eulogising the vākaṉam carried during temple festivals; கோயில் திருவிழாக்களில் மூர்த்தி எழுந்தருளும் வாகனத்தின் சிறப்பைப் பற்றிப் பாடுஞ் செய்யுள். (மீனாட். சரித்.i, 125.) |
| வாகனமலை | vākaṉa-mālai n. <>id.+. See வாகனக்கவி. (மாறனலங், முகவுரை. 22) . |
| வாகுப்தார் | vākup-tār n. prob. Arab. waqf+. Person in possession; அனுபோகஸ்தன். Madr. |
| வாங்கு | vāṅku n. <>Hindu. bānk. Billhook; அரிவாள். கைகளில் வாங்கு பிடித்திருக்கின்றனர் (எங்களுர், 32). |
| வாசகப்பா | vācaka-p-pā n. <>வாசகம்+. Comedy; கேலிநாடகம். pond. |
| வாசகப்பாங்கு | vācaka-p-pāṅku n. <>id.+. Good style; நல்ல உரைநடை. திருத்தமான வாசகப்பாங்காயும் (மாலுமிசா. முகவுரை.) |
| வாசமாற்றம் | vāca-māṟṟam n. <>வாசகம்+. Emigration; புறநாட்டிற் குடியேறுகை. pond. |
| வாசல்காரியம் | vācal-kāriyam n. <>வாசல்+. Officer who carries out royal orders; அரசன் ஆணையை நிறைவேற்றும் உத்தியோகஸ்தன். (M. E. R. 33 of 1928-9.) |
| வாசல் நிர்வாகம் | vācal-nirvākam n. <>id.+. See வாசல்காரியம். திருநெல்வேலி வாசல் நிர்வாகம் . . . தொழிற்படுத்தி (தெய்வச். விறலிவிடு. 77). |
| வாசல்பணம் | vācal-paṇam n. <>id.+. An ancient tax; பழையவரிவகை. வாசல்பணம் உள்பட்ட கடமை (S. I. I. i, 93). |
| வாசல்முதலி | vācal-mutali n. <>id.+. See வாசல்காரியம். (M. E. R. 293 of 1928-9.) . |
| வாசவுப்பு | vāca-v-uppu n. <>வாசம்+. Rock-salt; கல்லுப்பு. (சித். அக.) |
| வாசனைவாக்கியம் | vācaṉai-vākkiyam n. <>வாசனை+. Benediction; வாழ்த்து. வல்லோர் வகுத்த வாசனைவாக்கியம் பல்லோர் பகர (பெருங். உஞ்சைக். 34, 27). |
| வாசாப்பு | vācāppu n. See வாசகப்பா. Pond. . |
| வாசியோகம் | vāci-yōkam n. prob. வாசி+. A kind of yōga; யோகவகை. மூலக்கனலை வாசியோகத்தா லெழுப்பி (கோபாலகிருஷ்ணபாரதி, 95). |
| வாசிலிங்கரு | vāciliṅkaru n. Stem of a plant; தண்டு. (மூ. அ.) |
| வாசுகி | vācuki n. Seed; விந்து. (மூ. அ.) |
| வாட்டி | vāṭṭi n. The bull at the farthest end from the pole in the centre of the threshing-floor in treading corn; களமடிக்குங் கடைசிப் பிணையல்மாடு. Loc. |
| வாடகம் | vāṭakam n. <>bhāṭa. Rent; வாடகை. Loc. |
| வாடாவிளக்கு | vāṭā-viḷakku n. <>வாடு-+ ஆ neg.+. Perpetually burning lamp; நந்தாவிளக்கு. Tinn. |
| வாணம் | vāṇam n. cf. வானம். Excavation for laying foundation; கடைகால். Tinn. |
| வாணன் | vāṇaṉ n. A kind of paddy; நெல்வகை. மலைமுண்டன் வாணன் (நெல்விடு. 186). |
| வாணி - த்தல் | vāni- 11 v. tr. <>பாணி-. To form, make; அமைத்தல். மன்னுதிரு வெண்மணலை வாணித்து (இலஞ்சி. முருகனுலா, 37). |
| வாணி | vāṇi n. Flesh of the head of cattle. etc.; ஆடு மாடுகளின் தலைமாமிசம். (மூ. அ.) |
| வாதமடக்கி | vāta-maṭakki n. <>வாதம்+. Windkiller, l. sh., Cleorodendron phlomoides; மரவகை. (L.) |
| வாதுகவி | vātu-kavi n. <>வாது+. Verses of poets competing in a literary contest; பந்தயமிட்டுப் புலவர்கள் பாடுங் கவி. திருமலைராயன் முன் சீறியே வாதுகவி பாடுதற் கெதிர்வரும் (ஆராய்ச். பக். 327). |
| வாதுபாட்டு | vātu-pāṭṭu n. <>id.+. Song set for competition; போட்டிப் பரீட்சையில் பாடும் இசைப்பாட்டு. |
| வாமனூல் | vāmaṉūl n. <>வாமன்+. The Buddhst works; பௌத்தநூல். வாமனூலின் மறைபொரு ளல்லவோ (நீலகேசி, 244). |
| வாய்க்கடைப்புகையிலை | vāy-k-kaṭai-p-pukaiyilai n. <>வாய்+கடை+. Quid; வாயிலேமென்று அடக்கிக்கொள்ளும் புகையிலை யுருண்டை. pond. |
| வாய்க்காற்சடைச்சி | vāykkāṟ-caṭaicci n. <>வாய்க்கால்+. Malabar catamint; வெதுப்படக்கி. (சங். அக.) |
| வாய்க்கிலை | vāy-k-k-ilai n. <>வாய்+. Betel leaf; வெற்றிலை. (சரவண. பணவிடு. 304.) |
