Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| நாணயவட்டம் | nāṇaya-vaṭṭam n. <>நாணயம்+. Discount on coins; நாணயமாற்றிற் கொடுக்கும் வட்டம். (P. T. L.)  | 
| நாத்தடுக்கு | nā-t-taṭukku n. <>நா +. Stammering; திக்கல். Pond.  | 
| நாத்தாங்கிவாய் | nā-t-tāṅki-vāy n. <>id.+ தாங்கி+. Hasp, staple; நாதாங்கி. Loc.  | 
| நாதக்கட்டு | nāta-k-kaṭṭu n. <>நாதம்+. 1. Harmony of sounds; ஒலிகளின் இசைவு. நாதக்கட்டில்லாத கோஷ்டி. 2. Acoustic properties of a hall or building;  | 
| நாதராமக்கிரியை | nātarāmakkiriyai n. cf. நாதநாமக்கிரியை. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 104.)  | 
| நாமத்தராசு | nāma-t-tarācu n. <>நாமம்+. The common balance; தராசுவகை. Loc.  | 
| நாமதேயம் | nāma-tēyam n. <>nāmadhēya. The Vēdic passages which give the names of sacrifices; etc.; யாகாதிகளுக்குப் பெயரிடும் வேத வாக்கிய வகை. (விவேகசிந். பக். 5.)  | 
| நாமநக்ஷத்திரம் | nāma-nakṣattiram n. <>நாமம்+. The natal star of a person deduced by set rules, from the initial letter of his name; ஒருவனுடைய பெயரின் முதலெழுத்திலிருந்து விதிப்படி கொள்ளப்படும் அவனது நட்சத்திரம். (பஞ்.)  | 
| நாமநாராயணி | nāma-nārāyaṇi n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.)  | 
| நாமள் | nāmaḷ pron. Corr. of நாங்கள். நாமளிருவரு மொரேவகுப்பி லாங்குகலை பயின்றோமல்லவா (பஞ்ச. திருமுக. 432).  | 
| நாமைகதேசம் | nāmaikatēcam n. <>nāman + ēkadēša. (Gram.) Contraction of a name; முழுப்பெயரைச் சுருக்கிச் சொல்லும் பெயரின் பகுதி. (சிவக். பிரபந். பக். 84.)  | 
| நாய்க்கயிறு | nāy-k-kayiṟu n. prob. நாய்+. Hat retainer; தொப்பியின் நாடா. Pond.  | 
| நாய்க்குடை | nāy-k-kuṭai n. <>id.+. Mushroom; காளான். Loc.  | 
| நாயகக்கண்டம் | nāyaka-k-kaṇṭam n. <>நாயகம்+. A pendant in a jewel; பதக்க அணிவகை. (S. I. I. viii, 53.)  | 
| நாயகப்பேர் | nāyaka-p-pēr n. <>id.+. Headman of a gang of servants; வேலைக்காரரின் தலைவன். நாயகப்பேர் இரண்டுக்கு (S. I. I. viii, 27).  | 
| நாயகம் | nāyakam n. <>nāyaka. See நாயகப்பேர். நாற்பத்தெட்டு ஆளும் இரண்டு நாயகமும் (S. I. I. viii, 27). .  | 
| நாயகவாசி | nāyaka-vāci n. <>நாயகம்+. Phrase, clause or sentence in a poem, indicating the patron of the poet; பாட்டுடைத்தலைவனைக் குறிக்கும் வாசகம்.  | 
| நாயெறும்பு | nāy-eṟumpu n. <>நாய்+. A kind of ant; எறும்புவகை. (அபி. சிந்.)  | 
| நார்ச்சுண்ணாம்பு | nār-c-cuṇṇāmpu n. <>நார்+. Lathing plaster; சுண்ணாம்புவகை. (C. E. M.)  | 
| நாராயணக்கிரியை | nārāyaṇakkiriyai n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 104.)  | 
| நாராயணதுவாதசி | nārāyaṇa-tuvātaci n. <>nārāyaṇa+. Duādašī tithi in the bright fortnight of the month Kārttikai; கார்த்திகை மாதத்துச் சுக்கிலத் துவாதசி. (பஞ்.)  | 
| நாராயம் | nārāyam n. cf. நாராயநாழி. A measure; அளவு படிவகை. நாராயத்தால் நிசதம் உரிநெய் (S. I. I. v, 286).  | 
| நாலாம்வாசல் | nālām-vācal n. <>நாலு + ஆ-+. Passage leading to a courtyard, in a Brahmin's house; பிராமணர் வீட்டின் முற்றத்தை ஒட்டியுள்ள தாழ்வாரம். (G. Tn. D. i, 102.)  | 
| நாலாவது | nālāvatu n. <>id.+ id. Tobacco leaf, as being the fourth article used in chewing; புகையிலை. Colloq.  | 
| நாலிகங்கபாடிக்கல் | nālikaṅkapāṭi-k-kal n. A kind of gem; இரத்தினவகை. (S. I. I. ii, 196.)  | 
| நாலுகாற்சீவன் | nālu-kār-cīvaṉ n. <>நாலு + கால்+. Quadruped; மிருகம். நாலுகாற் சீவனோ நரர்களோ பறவையோ (சிவக். பிரபந். பக். 345).  | 
| நாவடக்கி | nā-v-aṭakki n. <>நா+. A plant; பூடுவகை. நின்று சிணுங்கி நிலம்பரண்டி நாவடக்கி (தெய்வச். விறலிவிடு. 403).  | 
| நாவணாத்தி | nāvaṇātti n. Myna; நாகண வாய்ப்புள். Pond.  | 
| நாவீறு | nā-vīṟu n. <> நா+. Powers of speech; பேச்சு வல்லமை. நாவீறுடைய ஒருவனை (ரகஸ்ய. 4).  | 
| நாவீறன் | nāvīṟan n. <>நாவீறு. Saint Nammāḻvār; நம்மாழ்வார். நன்மதுரகவி வணங்கு நாவீறன்வாழியே (நித்தியா. 116, 1).  | 
