Word |
English & Tamil Meaning |
|---|---|
| அல்கந்தி | alkanti n. <>அல்கு-+ அந்தி. Twilight; அந்திப்பொழுது. தெய்வத்தை. . அல்கந்தி நின்று தொழுதல் பழி (ஆசாரக்.10). |
| அல்கல் | alkal n. <>id. 1. Abiding, staying; தங்குகை. (அகநா.20) 2. Deficiency; 3. Night; 4. Day of 24 hours; 5. Destitution, want, poverty; |
| அல்கா | alkā adj. <>U.halkā. Mean, low, bas, vulgar; இழிவான. |
| அல்கு 1 - தல் | alku- 5.intr. 1. To shrink diminish, lessen. diminish in quantity gradually; சுருங்குதல். 2. To stay, abide, lodge; 3. To be permanent; 4. To be destroyed; To reach, arrive at; |
| அல்கு 2 | alku n. <>அல்கு-. 1. Night; இரவு. அல்குண் டடங்கல் வழி (ஆசாரக்.30). 2. Afternoon; |
| அல்குநர் | alkunar n. <>id. Inhabitants; குடிகல். அல்குநர் போகிய வூரோ ரன்னர் (கலித்.23). |
| அல்குல் | alkul n. <>id. [M.alkiṭam.] 1. Side; பக்கம். கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்குல் (பெரும்பாண்.244.) 2. Waist; 3. Pudendum muliebre; |
| அல்பத்துவம் | alpattuvam n. <>alpa-tva. 1. Smallness, meanness; சிறுமை. 2. Note rarely used in a melody-type, opp. to பகுத்துவம்; |
| அல்பொருள் | al-poruḷ n. <>அல்4+. 1. Sin; பாவம். அறனை நினைப்பானை யல்பொரு ளஞ்சும் (திரிகடு.72). 2. Standard of comparison; |
| அல்லகண்டம் | alla-kaṇṭam n. <>id.+.gaṇda. Affliction; துன்பம். (பிங்.) |
| அல்லகுறி | alla-kuṟi n. <>id.+. (Akap.) A sign pre-arranged to be given by the lover, but caused casually by something else; தலை மகனாலன்றிப் பிறிதொன்றனால் நிகழுங் குறி. (நம்பியகப்.159.) |
| அல்லகுறிப்படு - தல் | alla-kuṟi-p-paṭu- v.intr. <>id.+.(Akap.) To be misled at night by occurrence of signs happening casually; இரவுக்குறியிடத்துக் குறியல்லாத குறியிலே மயங்குதல். (தொல்.பொ.134, உரை.) |
| அல்லங்காடி | al-l-aṅkāṭi n. <>அல்1+. Evening bazaar, opp. to நாளங்காடி; அந்திக்கடை. (மதுரைக்.544.) |
| அல்லத்தட்டு - தல் | alla-t-taṭṭu- v.tr. <>அல்லல்+. 1. To refuse, refuse compliance, object to, abrogate, disown; தடுத்தல். Vul. (W.) 2. To frustrate, disappoint; |
| அல்லது | allatu <>அல்4 n. Evil. sin; தீவினை. அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல (கலித்.148) - 1. Or, if not, or else, an adversative conjunction. 2. Except as; |
| அல்லதூஉம் | allatūum conj. <>id.+. See அல்லாமலும். அல்லதூஉ மவனுடைத் துணைவ ராயினார்க்கு (கம்பரா. பிணிவீட்.22). |
| அல்லதேல் | allatēl conj. <>id. +ஏல் If not; அல்லாமற்போனால். (கந்தபு. மோன.10.) |
| அல்லதை | allatai conj. <>id. Except; அல்லாமல். (கலித்.9.) |
| அல்லம் | allam n. [T.allamu, K.alla.] Ginger. See இஞ்சி. (திவா.) |
| அல்லமன் | allamaṉ n. K.allaman. Name of the hero of the Pirapu-liṅka-līlai, considered to be a manifestation of Siva; பிரபு லிங்கல¦லைக் கதாநாயகன். |
| அல்லரியல் | allariyal n. That which is slightly woven or braided; கண்ணறையுள்ளது. அல்லரியற் புடைவை. (J.) |
| அல்லல் | allal n.prob. அல்லு-. [T.allari, K.alla, M.allal.] Affliction, distress, evil, misfortune, privation; துன்பம். அழிவின்க ணல்ல லுழப்பதா நட்பு (குறள், 787). |
| அல்லவை | allavai n. <>அல்1. 1. Sin, evil; பாவம். அழூக்காற்றி னல்லவை செய்யார் (குறள்,164). 2. Unlessness, fruitlessness; |
| அல்லறைசில்லறை | allaṟai-cillaṟai n. rdupl. of சில்லறை. Odds and ends, small balances; மிச்சத்தொகை. Loc. |
| அல்லா 1 - த்தல் | allā- 11 v.intr. 1. To suffer, to be in distress; துன்பமுறுதல். வயவுநோய் நலி தலி னல்லாந்தார் (கலித்.29). 2. To rejoice, to be glad; |
