Word |
English & Tamil Meaning |
|---|---|
| சரசுவதிமால் | Caracuvati-māl, n. <>id. +. Public library, as in Tanjore palace; தஞ்சையரண்மனையிலிருப்பது போன்ற புத்தகசாலை. |
| சரசுவதிமாலை | Caracuvati-mālai, n. <>id. +. An astrological work; ஒரு சோதிடநூல். (W.) |
| சரசுவதியந்தாதி | Caracuvati-y-antāti, n. <>id. +. A poem on Sarasvatī attributed to kampaṉ; சரசுவதியின் மீது கம்பரியற்றியதாகக் கூறப்படும் ஒரு பிரபந்தம் |
| சரசுவதியூர்தி | Caracuvati-y-ūrti, n. Centipede; பூரான். |
| சரசுவதிவாக்கு | Caracuvati-vākku, n. <>சரசுவதி +. Inborn poetic capacity, due to the grace of Sarasvatī; கலைமகள் அருளால் இயற்கையாகவே அமைந்த கவனசத்தி. (J.) |
| சரசொத்து | Cara-cottu, n. <>Cara +. Movable property; சங்கமசொத்து. (C. G.) |
| சரசோதி | Caracōti, n. See சரசுவதி. (திவா. MSS.) . |
| சரசோதிடம் | Caracōtiṭam, n. <>šara +. See சரசாத்திரம். Colloq. . |
| சரஞ்சாம் | Caracām, n. <>U. Sar-anjām. Furniture, appurtenances, paraphernalia; தட்டு முட்டு (C.G.) |
| சரட்டட்டிகை | Caraṭṭaṭṭikai, n. <>சரடு + அட்டிகை. Necklace of gold threads with a patakkam pendant; பொற்சரடு செய்து பட்டையாகத் தட்டப்பட்டுப் பதக்கங்கட்டிய கழுத்தணிவகை. |
| சரட்டடைப்பன் | Caraṭṭaṭaippaṉ, n. A kind of cattle disease; கால்நடை வியாதிகளுள் ஒன்று. (மாட்டுவா. 82.) |
| சரட்டுச்சரட்டெனல் | Caraṭṭu-c-caraṭ-ṭeṉal, n. Onom. expr. of (a) swishing, rushing sound, as of air in motion; ஓர் ஒலிக்குறிப்பு: (b) free and easy motion without obstruction, as of stools; |
| சரட்டுத்தாலி | Caraṭṭu-t-tāli, n. <>சரடு +. A kind of wedding badge hung in a gold necklet; பொன் சரட்டிற் கோத்தணியும் தாலிவகை. Loc. |
| சரட்டுப்பொருத்தம் | Caraṭṭu-p-poruttam, n. <>id. +. A kind of agreement in the horoscopes of the prospective bride and bridegroom. இரச்சுப்பொருத்தம். |
| சரட்டுமேனிக்கு | Caraṭṭu-mēṉikku, adv. In a lump, on an average. See சகட்டுமேனிக்கு. . |
| சரட்டெனல் | Caraṭṭeṉal, n. onom. expr. of moving quickly; விரைவுக்குறிப்பு. |
| சரட்டை | Caraṭṭai, n. 1. Coconut shell; சிரட்டை. Loc. 2. A fish, Malaeanthus; |
| சரடம் 1 | Caraṭam, n. <>Saraṭa. 1. Bloodsucker, a kind of lizard; ஒந்தி (திவா.) 2. Chameleon; |
| சரடம் 2 | Caraṭam, n. A kind of tree; குசும்பாமரம். (இலக். அக.) |
| சரடு | Caraṭu, n. prob. sara. 1. Twisted thread, cord, twine; முறுக்கு நூல். மறைநான்கே வான்சரடா (திருவாச. 12, 2). 2. A necklet of plaited gold thread; 3. Gold, silver or cotton, thread; 4. Nose-ring of bullocks; 5. Chain, as of mountains; row; 6. Stratagem, tricks; |
| சரடுதிரி - த்தல் | Caraṭu-tiri-, v. intr. <>சரடு+. 1. To twist yarn or thread; கயிறு திரித்தல். 2. See சரடுமுறுக்கு-. |
| சரடுமுறுக்கு - தல் | Caraṭu-muṟukku-, v. <>id. + . tr. To instigate; (W.)--intr. To invent a story and circulate; தீயன செய்யத் தூண்டுதல். ஒரு விஷயத்தைப் பொய்யாகக் கற்பித்து வெளியிடுதல். Loc. |
| சரடுவிடு - தல் | Caraṭu-viṭu-,. v. intr. <>id. +. Loc. 1. To give out one's idea through an intermediary; பிறர்மூலமாகத் தன் கருத்தை வெளியிடுதல். 2. To sound a person's views indirectly; 3. See சரடுமுறுக்கு-. |
| சரண் 1 | Caraṇ, n. <>caraṇa. See சரணம். 1. நாகணைமிசை நம்பிரான் சரணே (திவ். திருவாய். 5, 10, 11). . |
| சரண் 2 | Caraṇ, n. <>šaraṇa. See சரணம், 1. தனிச்சரண் சரணாமென (திருவாச. 30, 6). . |
| சரண் 3 | Caraṇ, n. Seeta's thread. See அம்மையார்கூந்தல். (தைலவ. தைல. 14.) . |
| சரண்புகு - தல் | Caraṇ-puku-, v. tr. <>சரண் +. To take refuge in; அடைக்கலம் புகுதல். அருளின் வேலையைச் சரண்புகுந்தனனென (கம்பரா. விபீடண. 54). |
| சரணகமலம் | Caraṇa-kamalam, n. <>caraṇa + kamala. See சரணரவிந்தம். தரையின்மிசை வீழ்ந்தவர்தஞ் சரணகமலம் பூண்டார் (பெரியபு. அப் பூதி. 17). . |
