Word |
English & Tamil Meaning |
|---|---|
| சடைமுடியோர் | caṭai-muṭiyōr, n. <>id.+. Ascetics, as persons with matted hair; [சடை முடியையுடையவர்] முனிவர். (பிங்.) |
| சடையநாயனார் | caṭaiya-nāyaṉār, n. <>id.+. A canonized šaiva saint, father of Cuntaramūrtti-nāyaṉār, one of 63; சுந்தரமூர்த்தி நாயனார்க்குத் தந்தையும் அறுபத்துமூவருள் ஒருவருமான நாயனார். (பெரியபு.) |
| சடையப்பன் | caṭai-y-appaṉ, n. <>id.+. 1. Lit., the father or lord with matted hair. šiva; [சடைமுடியையுடைய அப்பன்] சிவன். அப்பார் சடையப்பன் (திருவாச. 8, 11). 2. See சடையன், . |
| சடையவரை | caṭai-y-avarai, n. <>id.+. A species of bean; அவரைவகை. |
| சடையன் | caṭaiyaṉ, n. <>id. 1. šiva; சிவன். (உரி. நி) 2. A canonized šaiva saint. 3. A Vēḷāḷa chief of Veṇṇeynallūr, patron of Kampaṉ; |
| சடையாண்டி | caṭai-y-āṇṭi, n. <>id.+. Religious mendicant with matted hair; சடை வளர்த்த ஆண்டி. |
| சடையாணி | caṭai-y-āṇi, n. <>id.+. 7. Flat-headed nail; ஆணிவகை. (W.) |
| சடையோன் | caṭaiyōn, n. <>id. 1. See சடையன், 1. பொன்னார் சடையோன் புலியூர் (திருக்கோ. 89). 2. Vīrabhadra; |
| சடைவாறு - தல் | caṭaivāṟu-, v. intr.<>சடைவு+ஆறு-. To have rest or relief; இளைப்பாறுதல். Tinn. |
| சடைவில்லை | caṭai-villai, n. <>சடை4+. Gold disc worn on the hair-plait, a woman's ornament; தலைப்பின்னலிற் பெண்கள் செருகியணியும் தலையணிவகை. |
| சடைவிழு - தல் | caṭai-viḻu-, v. intr. <>id.+. 1. To get matted or entangled, grow shaggy or bushy as the hair; மயிர்சடையாகப்பற்றுதல் 2. To become useless; |
| சடைவு | caṭaivu, n. <>சடை1-. 1. Wearisomeness, depression of spirits, dejection; மனத்தளர்ச்சி. அவனுக்கு சடைவு அதிகம். Loc. 2. Rivetting; |
| சண்டகன் | caṇṭakaṉ n. prob. caṇdaka. A mineral poison; இலிங்கபாஷாணம். (மூ. அ.) |
| சண்டகோபி | caṇṭa-kōpi, n. <>caṇda-kōpī nom. sing. of caṇda-kōpin. Person of violent anger; கடுங்கோபமுடையவன். சண்டகோபி . . . துருத்தேவதை. (யசோதர. 1, 14). |
| சண்டகோலாகலம் | caṇṭa-kōlākalam, n. <>caṇda-kōlāhala. A hell; நரகவிசேடம். (சேது ப. துராசார. 22.) |
| சண்டகோலாலம் | caṇṭa-kōlālam, n. <>id. See சண்டகோலாகலம். (சிவதரு. சுவர்க்க. நரக. 180.) . |
| சண்டதரம் | caṇṭataram, n. <>caṇda-tara. A kind of hell; நரகவிசேடம். (சிவதரு. சுவர்க்க நரக. 108.) |
| சண்டதாண்டவம் | caṇṭa-tāṇṭavam, n. <>caṇda+. Dance of šiva with Kāḷī; காளியோடு சிவன் ஆடிய கூத்து. (சங். அக.) |
| சண்டநாயகன் | caṇṭa-nāyakaṉ, n. <>id.+. A canonized šaiva saint. See சண்டேசுரநாயனார். சண்டநாயகனுக்குக் கருள் செய்தவன். (தேவா. 237, 8). |
| சண்டப்பிரசண்டம் | caṇṭa-p-piracaṇṭam, n. <>id.+. 1. Wild fierceness, extreme violence; மிகு கடுமை. மண்டிவரு சண்டப்பிரசண்ட மாருதமான (திருவேங். சத. 48). 2. Boisterousness, turbulence, often applied to persons; |
| சண்டப்பை | caṇṭa-p-pai, n. prob. அண்டப்பை. Uterus, womb; கருப்பம். சண்டப்பைக் குள்ளிருந்து. (தனிப்பா. i, 120, 4). |
| சண்டம் 1 | caṇṭam, n. <>caṇda. 1. Fierceness; wickedness; கொடுமை. சண்டமன்னனைத் தாடொழுது. (சீவக. 430). 2. Anger; 3. Speed, rapidity, swiftness; 4. Strength, power; 5. A kind of hell; |
| சண்டம் 2 | caṇṭam, n. See சண்டன். (உரி. நி.) . |
| சண்டமாருதசிந்தூரம் | caṇṭa-māruta-cintūram, n. <>caṇda+māruta+. A medicinal powder; சிந்தூரவகை. (W.) |
| சண்டமாருதம் | caṇṭa-mārutam, n. <>id.+id. Hurricane, wind-storm; பெருங்காற்று. |
| சண்டவேகம் | caṇṭa-vēkam, n. <>id.+. Great, excessive or headlong speed, impetuosity; மிகுவிரைவு. தேருமெதிர் நடத்தினர் சண்ட வேகமொடு. (பாரத. பன்னிரண்டாம். 22). |
