Word |
English & Tamil Meaning |
|---|---|
| கைகண்ட | kai-kaṇṭa, n. <>id. +. Efficacious; அனிபவசித்தமான. தீவினைக் கருக்கெடும்மிது கைகண்ட யோகமே (தேவா. 927, 5). |
| கைகண்டசாரம் | kai-kaṇṭa-cāram, n. <>id.+. Chloride of ammonium; நவச்சாரம். (சங். அக.) |
| கைகண்டயோகம் | kai-kaṇṭa-yōkam, n. <>id. +. Medicine tried and found to be efficacious, sovereign remedy; அனுபவசித்தமான ஔஷதம். கைகண்டயோகந் தடவத் தீரும் (திவ். நாய்ச், 12, 5). |
| கைகயன் | kaikayaṉ, n. <>Kēkaya. 1. King of kekays; கேகய நாட்டரசன். கைகயன் மகள் விழுந்தரற்ற (கம்பரா. கிளைகண்டு. 40). 2. Inhabitant of kekaya; |
| கைகர - த்தல் | kai-kara-, v. tr. <>கை5+கர-. To hide, conceal; ஒளித்தல். சான்றவர் கைகரப்ப (பழ. 242). |
| கைகல - த்தல் | kai-kala-, v. intr. <>id. +. 1. To unite, join; கூடுதல். ஆசையிற் கைகலந்து (திருப்பு. 296). 2. To engage in a hand-to hand fight; |
| கைகழி - தல் | kai-kaḻi-, v. intr. <>id. +. To go beyond, exceed the bounds, overstep the limits; எல்லை கடத்தல். அப்ராப்தமானதிலே கைகழியப்போய். (ஈடு, 4, 6, 8). |
| கைகழுவு - தல் | kai-kaḻuvu-, v. <>id.+. intr. 1. To wash the hands, as after meals; கையலம்புதல்.--tr. 2. To wash one's hands of, relinquish, abandon; |
| கைகாட்டி | kai-kāṭṭi, n. <>id. +. 1. See கைகாட்டிமரம். . 2. A caste of accountants, so called from their custom of prohibiting a daughter-in law from communicating with her mother-in law except by signs; |
| கைகாட்டிமரம் | kai-kāṭṭi-maram, n. <>id. +. Sign board, semaphore; அடையாளங் குறிக்கும் மரம். |
| கைகாட்டு - தல் | kai-kāṭṭu-, n. <>id. +. 1. To make signs with the hand; சைகை காட்டுதல். பேதையார் கைகாட்டும் பொன்னும் (நாலடி, 328). 2. To gesticulate with hands, as dancing girls; 3. To give a little; 4. To offer to God; 5. To exhibit one's strength; 6. To enable one to earn his livelihood; 7. To wave the flag, as in railway stations; 8. To bribe; |
| கைகாட்டு | kai-kāṭṭu, n. <>id.+. Gesture with hands; கைச்சைகை. கடவுணீ யுணர்த்துவதுங் கைகாட்டு (தாயு. கல்லாலின். 1). |
| கைகாண்(ணு) - தல் | kai-kāṇ-, v. intr. <>id.+. To find out by experience; அனுபவத்தில் அறிதல். மருந்து கைகண்டேன் (பெரியபு. கண்ணப். 181). |
| கைகாய்த்து - தல் | kai-kāyttu-, v. tr.<> id. +. To burn; எரியச்செய்தல். காடு கைகாய்த்திய நீடுநா ளிருகை (பதிற்றுப். 82, 9). |
| கைகாரன் | kai-kāraṉ, n. <>id. +. See கைக்காரன். . |
| கைகாவல் | kai-kāval, n. <>id. +. That which is useful in emergency, as medicines, provisions, weapons; சமயத்திற்கு உதவுவது. Loc. |
| கைகாற்பிடிப்பு | kai-kāṟ-piṭippu, n. <>id. +. Rheumatism; வாதநோய். |
| கைகுவி - த்தல் | kai-kuvi-, v. tr. <>id. +. See கைகூப்பு-. . |
| கைகுளிர | kai-kuḷira, adv. <>id. +. Liberally, freely; தாராளமாய். கைகுளிரக் கொடுத்தான். |
| கைகுறண்டு - தல் | kai-kuṟaṇṭu-, v. intr. <>id. +. (W.) 1. To be affected by spasms in the hands; to be cramped in the hands; வலிப்பால் கை மடங்குதல். 2. To be stingy, parsimonious, close-fisted; |
| கைகூசு - தல் | kai-kūcu-, v. intr. <>id. +. 1. To shrink, draw back, shirk out of fear or reserve; பயத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல். (W.) 2. To be stingy parsimonious; |
| கைகூட்டு - தல் | kai-kūṭṭu-, v. tr. <>id. +. See கைகூப்பு-. வணங்கித் தன் கைகூட்டினளாகி (பெருங். வத்தவ. 13, 34-35). . |
| கைகூடு - தல் | kai-kūṭu-, v. <>id. + intr. 1. To succeed, prosper; சித்தியாதல். காரியங் கை கூடிற்று.--tr. 2. To approach, draw near; |
