க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஷஷ்வச்சாந்திம் நிகச்சதி। கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த: ப்ரணஷ்யதி॥ 9.31 ॥ |
அவன் விரைவில் தர்மத்தில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலைத்த அமைதியை பெறுகிறான். குந்தியின் மகனே ! எனது பக்தன் அழிவதில்லை என்பது உறுதி.
மாம் ஹி பார்த வ்யபாஷ்ரித்ய யே அபி ஸ்யு: பாபயோநய:। ஸ்த்ரியோ வைஷ்யாஸ்ததா ஷூத்ராஸ்தே அபி யாந்தி பராம் கதிம்॥ 9.32 ॥ |
அர்ஜுனா ! யார் இழிந்த பிறவிகளோ அவர்களும், பெண்கள், வைசியர் மற்றும் சூத்திரர்கள் என்னை சார்ந்து இருந்து நிச்சயமாக மேலான கதியை அடைகிறார்கள்.
கிம் புநர்ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா। அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்॥ 9.33 ॥ |
புண்ணியசாலிகளும், பக்தர்களுமாகிய பிராமணர்களும், ராஜரிஷிகளும் அடைய மாட்டார்களா என்ன ! நிலையற்றதும் இன்பமற்றதுமாகிய இந்த உலகை அடைந்த நீ என்னை வழிபடு.
மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு। மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:॥ 9.34 ॥ |
மனத்தை என்னிடம் வைத்தவனாக, எனது பக்தனாக, என்னை வழிபடுபவனாக ஆவாய். என்னை வணங்கு, இவ்வாறு என்னை மேலான கதியாக கொண்டு, மன உறுதியுடன் வழிபட்டால் என்னையே அடைவாய்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே ராஜவித்யாராஜகுஹ்யயோகோ நாம நவமோ அத்யாய:॥ 9 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்' எனப் பெயர் படைத்த ஒன்பதாவது அத்தியாயம் நிறைவுற்றது.