மஹாத்மாநஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஷ்ரிதா:। பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்॥ 9.13 ॥ |
அர்ஜுனா ! தெய்வீக இயல்பினரான மகான்கள், உயிர்களின் பிறப்பிடமும் , அழிவற்றவனும் ஆகிய என்னை அறிந்து வேறு எதிலும் மனத்தை செலுத்தாமல் என்னை வழிபடுகிறார்கள்.
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஷ்ச த்ருடவ்ரதா:। நமஸ்யந்தஷ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே॥ 9.14 ॥ |
என்னை எப்போதும் போற்றியும், உறுதியான ஈடுபாட்டுடன் முயற்சி செய்தும், பக்தியுடன் வணங்கியும், எப்போதும் ஒருமுகப்பட்ட மனத்தினராக இருந்தும் அவர்கள் வழிபடுகிறார்கள்.
ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே। ஏகத்வேந ப்ருதக்த்வேந பஹுதா விஷ்வதோமுகம்॥ 9.15 ॥ |
ஞான வேள்வியில் வழிபடுகின்ற மற்றவர்களும் ஒன்றாக, பலவாக, எங்கும் நிறைந்தவனாக பல விதங்களில் என்னையே வழிபடுகிறார்கள்.
அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹமஹமௌஷதம்। மந்த்ரோ அஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம்॥ 9.16 ॥ |
நானே கிரது, நானே வேள்வி, நானே ஷ்வதா, நானே ஔஷதம், நானே மந்திரம், நானே நெய், நானே அக்னி, வேள்வி செய்தலாகிய கர்மமும் நானே.
பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ:। வேத்யம் பவித்ரமோம்கார க்ருக்ஸாம யஜுரேவ ச॥ 9.17 ॥ |
இந்த உலகின் தந்தையாக, தாயாக, பாட்டனாக, வினைபயனை அளிப்பவனாக, அறியத்தக்கவனாக, புனிதபடுத்துபவனாக, பிரணவ வடிவினனாக, ரிக், சாம, யஜுர், வேதங்களாக நானே இருக்கிறேன்.
கதிர்பர்தா ப்ரபு: ஸாக்ஷீ நிவாஸ: ஷரணம் ஸுஹ்ருத்। ப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம்॥ 9.18 ॥ |
புகலிடம், வளர்ப்பவன், தலைவன், சாட்சி, இருப்பிடம், தஞ்சம், நண்பன், பிறப்பிடம், ஒதுங்குமிடம், தங்குமிடம், செல்வம், அழிவற்ற விதை, அனைத்தும் நானே.