
தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்ருண்ஹாம்யுத்ஸ்ருஜாமி ச। அம்ருதம் சைவ ம்ருத்யுஷ்ச ஸதஸச்சாஹமர்ஜுந॥ 9.19 ॥ |
அர்ஜுனா ! நான் வெப்பம் தருகிறேன், நானே மழை பெய்ய செய்கிறேன், தடுக்கவும் செய்கிறேன், மரணமின்மையும், மரணமும், இருப்பதும், இல்லாததும் நானே.
த்ரைவித்யா மாம் ஸோமபா: பூதபாபா
யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே। தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோகம் அஷ்நந்தி திவ்யாந்திவி தேவபோகாந்॥ 9.20 ॥ |
வேதங்களை அறிந்தவர்களும், சோமபானம் அறிந்தியவர்களும், பாவம் நீங்க பெற்றவர்களும், யாகங்களால் என்னை வழிபாட்டு சொர்கத்தை பிராத்திக்கிறார்கள். அவர்கள் நற்செயல்களின் விளைவாக இந்திர லோகத்தை அடைந்து சொர்கத்தில் மேலான தேவ போகங்களை அனுபவிக்கிறார்கள்.
தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஷாலம்
க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஷந்தி। ஏவம் த்ரயீதர்மமநுப்ரபந்நா கதாகதம் காமகாமா லபந்தே॥ 9.21 ॥ |
அவர்கள் பரந்த அந்த சொர்க்கத்தை அனுபவித்து, புண்ணிய பலன் தீர்ந்ததும் பூமியை அடைகிறார்கள். வேதங்கள் கூறுகின்ற கர்மங்களை பின்பற்றுபவர்கள் உலகியல் நாட்டம் உடையவர்களாக இவ்வாறு வரவும் போகவும் செய்கிறார்கள் .
அநந்யாஷ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே। தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்॥ 9.22 ॥ |
வேறு எதையும் நினைக்காமல் என்னையே நினைத்து யார் எங்கும் என்னையே வழிபடுகிறார்களோ, மாறாத உறுதிகொண்ட அந்த பக்தர்களின் யோக க்ஷேமத்தை நான் தாங்குகின்றேன்.
யே அப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஷ்ரத்தயாந்விதா:। தே அபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்॥ 9.23 ॥ |
குந்தியின் மகனே ! எந்த பக்தர்கள் மற்ற தெய்வங்களையும் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்களோ, அவர்களும் உண்மையை சரியாக அறியாமல் என்னையே வழிபடுகிறார்கள் .
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச। ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஷ்ச்யவந்தி தே॥ 9.24 ॥ |
எல்லா யாகங்களுக்கும் நானே தலைவன். யாகங்களை அனுபவிப்பவனும் நானே. ஆனால் அவர்கள் என்னை உள்ளபடி அறிவதில்லை. அதனால் மேலான பலனை இழக்கிறார்கள்.