யாந்தி தேவவ்ரதா தேவாந்பித்றுந்யாந்தி பித்ருவ்ரதா:। பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோ அபி மாம்॥ 9.25 ॥ |
தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களை அடைகிறார்கள். இறந்த முன்னோரை வழிபடுபவர்கள் முன்னோரை அடைகிறார்கள். பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களை அடைகிறார்கள். என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி। ததஹம் பக்த்யுபஹ்ருதமஷ்நாமி ப்ரயதாத்மந:॥ 9.26 ॥ |
இலை, பூ, பழம், நீர், போன்றவற்றை யார் எனக்கு பக்தியுடன் அளிக்கிறானோ, தூய மனத்தை உடைய அவன் பக்தியுடன் அளிப்பதை நான் ஏற்று கொள்கிறேன்.
யத்கரோஷி யதஷ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்। யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம்॥ 9.27 ॥ |
குந்தியின் மகனே ! எதை செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதை தானம் செய்கிறாயோ, எந்த தவம் செய்கிறாயோ, அதை எனக்கு அர்பனமாக செய்.
ஷுபாஷுபபலைரேவம் மோக்ஷ்யஸே கர்மபந்தநை:। ஸம்ந்யாஸயோகயுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி॥ 9.28 ॥ |
இவ்வாறு, நல்ல மற்றும் தீய பலன்களை தருகின்ற கர்மபந்தங்களிலிருந்து விடுபடுவாய். சந்நியாச யோகத்தில் மனத்தை நிலைபெற செய்து , வினைகளிலிருந்து விடுபட்டு என்னை அடைவாய்.
ஸமோ அஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோ அஸ்தி ந ப்ரிய:। யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம்॥ 9.29 ॥ |
நான் எல்லா உயிர்களிடமும் சமமாக இருக்கிறேன். எனக்கு பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை, யார் என்னை பக்தியுடன் போற்றுகிரார்களோ, அவர்கள் என்னிடம் உள்ளார்கள் , நானும் அவர்களிடம் உள்ளேன்.
அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக்। ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ:॥ 9.30 ॥ |
மிக கொடியவனும் கூட வேறு எதையும் நினைக்காமல் என்னையே வழிபடுவானானால் அவன் நல்லவன் என்றே கருதப்பட வேண்டும். ஏனெனில் அவன் சரியான நோக்கத்தை உடையவன்.