
அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஷ:। தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந:॥ 8.14 ॥ |
அர்ஜுனா ! வேறு எண்ணம் இல்லாமல் நீண்ட காலம் என்னை யார் எப்போதும் நினைக்கிறானோ, ஒருமுகப்பட்ட நிலையில் நிலைபெற்ற அந்த யோகிக்கு நான் எளிதில் அகபடுகிறேன்.
மாமுபேத்ய புநர்ஜந்ம து:காலயமஷாஷ்வதம்। நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்திம் பரமாம் கதா:॥ 8.15 ॥ |
உயர்ந்த பக்குவம் பெற்ற மகான்கள் என்னை அடைந்து துக்கத்தின் இருப்பிடமும் நிலையற்றதுமாகிய பிறவியை மீண்டும் அடைவதில்லை.
ஆப்ரஹ்மபுவநால்லோகா: புநராவர்திநோ அர்ஜுன। மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே॥ 8.16 ॥ |
அர்ஜுனா ! பிரம்மலோகம் வரையுள்ள அனைத்து உலகங்களில் இருப்பவர்களும் மீண்டும் பிறந்தேயாக வேண்டும்.குந்தியின் மகனே ! என்னை அடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை.