
அவ்யக்தாத் வ்யக்தய: ஸர்வா: ப்ரபவந்த்யஹராகமே। ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே॥ 8.18 ॥ |
( பிரம்மாவின் ) பகல் வரும் போது தோன்றா நிலையிலிருந்து (பிரபஞ்சம் முதலான ) எல்லா தோற்றங்களும் வெளிபடுகின்றன. இரவு வரும் போது அவ்யக்தம் என்ற பெயருடைய அதன் உள்ளேயே ஒடுங்குகிறது.
பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே। ராத்ர்யாகமே அவஷ: பார்த ப்ரபவத்யஹராகமே॥ 8.19 ॥ |
அர்ஜுனா ! உயிர் கூட்டம் தன்வசமின்றி பிறந்து பிறந்து இரவு வரும் போது ஒடுங்குகின்றன. பகல் வரும் போது வெளிபடுகின்றன.
பரஸ்தஸ்மாத்து பாவோ அந்யோ அவ்யக்தோ அவ்யக்தாத்ஸநாதந:। ய: ஸ ஸர்வேஷு பூதேஷு நஷ்யத்ஸு ந விநஷ்யதி॥ 8.20 ॥ |
தோன்றா நிலையில் உள்ள இந்த படைப்பை விட மேலானதாக, வேறானதாக, தோன்றாததாக, அழிவற்றதாக யார் உள்ளாரோ, அவர் எல்லா உயிர்களும் அழிந்தாலும் அழிவதில்லை.
அவ்யக்தோ அக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் கதிம்। யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம॥ 8.21 ॥ |
தோன்றாதவர், அழிவற்றவர், என்று சொல்லபடுகின்ற அவரை அடைவதை மேலான நிலை என்று சொல்கின்றனர். எதை அடைந்து திரும்பி வருவதில்லையோ அது எனது மேலான இருப்பிடம்.
புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா। யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்॥ 8.22 ॥ |
அர்ஜுனா ! உயிர்கள் யாருள் இருக்கின்றனவோ, யாரால் இவை அனைத்தும் வியாப்பிக்கபட்டு இருக்கின்றனவோ அந்த மேலான இறைவன் வேறு நோக்கமற்ற பக்தியால் அடையபடுகிறார்.