
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச। மய்யர்பிதமநோபுத்திர்மாமேவைஷ்யஸ்யஸம்ஷய:॥ 8.7 ॥ |
எப்போதும் என்னை நினைத்தவாறு போர் செய், என்னிடம் மனத்தையும் புத்தியையும் சமர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றி என்னையே அடைவாய்.
அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா। பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந்॥ 8.8 ॥ |
அர்ஜுனா ! மனத்தால் வேறு எதையும் நாடாமல் மேலான ஒளிமயமான இறைவனை இடைவிடாமல் தியானிப்பவன் அவரை அடைகிறான்.
கவிம் புராணமநுஷாஸிதாரம்
அணோரணீயம்ஸமநுஸ்மரேத்ய:। ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூபம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத்॥ 8.9 ॥। । ப்ரயாணகாலே மநஸா அசலேந பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ। ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஷ்ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்॥ 8.10 ॥ |
எல்லாம் அறிந்தவனை, ஆதிபரம்பொருளை, அனைத்தையும் ஆள்பவனை, அனுவைவிட நுண்ணியவனை, அனைத்தையும் தாங்குபவனை, சிந்தனைக்கு எட்டாத வடிவம் உடையவனை, இருளுக்கு அப்பாற்பட்டவனை, புருவ நடுவில் பிராணனை நன்றாக நிலைநிறுத்தி, பக்தியுடனும் யோக ஆற்றலுடனும், அசைவற்ற மனத்துடன் மரண காலத்தில் யார் நினைகின்றானோ அவன் அந்த ஒளிமிக்க மேலான இறைவனையே அடைகிறான்.
யதக்ஷரம் வேதவிதோ வதந்தி
விஷந்தி யத்யதயோ வீதராகா:। யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பதம் ஸம்க்ரஹேண ப்ரவக்ஷ்யே॥ 8.11 ॥ |
வேதத்தை அறிந்தவர்கள் எதை ஓங்காரம் என்கிறார்களோ, பற்று நீங்கிய துறவிகள் எதை அடைகிறார்களோ, எதை விரும்புபவர்கள் பிரம்சரியத்தை கடைபிடிக்கிறார்களோ அந்த மந்திரத்தை உனக்கு சுருக்கமாக சொல்கிறேன்.
ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச। மூத்ந்யா। ர்தாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம்॥ 8.12 ॥ ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந்। ய: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்॥ 8.13 ॥ |
உடம்பின் வாசல்கள் அனைத்தையும் அடக்கி, மனத்தை இதயத்தில் நிறுத்தி, பிராணனை உச்சந்தலையில் குவித்து, யோக தாரணியில் நிலைபெற்று, பிரமம்மாகிய ஓம் என்னும் ஓரெழுத்து மந்திரத்தை உச்சரித்துகொண்டு, என்னை நினைத்தவாறு உடம்பை விட்டு யார் போகிறானோ அவன் மேலான நிலையை அடைகிறான்.