
யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகிந:। ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப॥ 8.23 ॥ |
பரத குல பெருமகனே ! எந்த காலத்தில் இறக்கின்ற யோகிகள் திரும்பி வரமாட்டார்கள், எந்த காலத்தில் இறப்பவர்கள் திரும்பி வருவார்கள் என்கிற விவரத்தை உனக்கு சொல்கிறேன் .
அக்நிர்ஜோதிரஹ: ஷுக்ல: ஷண்மாஸா உத்தராயணம்। தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜநா:॥ 8.24 ॥ |
தீ, சுடர், பகல், வளர்பிறை காலம், ஆறு மாத காலமாகிய உத்தராயணம் –இந்த வேளையில் உடலை விட்டு போகின்ற பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை அடைகிறார்கள்.
தூமோ ராத்ரிஸ்ததா க்ருஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயநம்। தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே॥ 8.25 ॥ |
புகை, இரவு, தேய்பிறை காலம், ஆறு மாத காலமாகிய தட்சிணாயணம் –இந்த வேளையில் உடலை விட்டு போகின்ற யோகி சந்திர ஒளியை அடைந்து திரும்பி வருகிறான்.
ஷுக்லக்ருஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: ஷாஷ்வதே மதே। ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந:॥ 8.26 ॥ |
ஒளியும் இருளுமாகிய இந்த வழிகள் உலகில் என்றென்றும் உள்ளவை என்று கருதபடுகின்றன. ஒன்றினால் பிரவமையை அடைகின்றான். மற்றொன்றினால் மீண்டும் பிறக்கிறான்.
நைதே ஸ்ருதீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கஷ்சந। தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந॥ 8.27 ॥ |
குந்தியின் மகனே அர்ஜுனா ! இந்த இரண்டு வழிகளையும் அறிகின்ற எந்த யோகியும் குழப்பம் அடைவதில்லை. ஆகையால் எப்போதும் யோகத்தில் நிலைபெற்றவனாக ஆவாய்.
வேதேஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ
தாநேஷு யத்புண்யபலம் ப்ரதிஷ்டம்। அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம்॥ 8.28 ॥ |
வேதங்களை படிப்பதற்கும், வேள்விகள் செய்வதற்கும், தவத்திற்கும், தானத்திற்கும் எந்த புண்ணிய பலன் சொல்லபட்டிருக்கிறதோ, யோகி அவற்றை அறிந்து, அவற்றையெல்லாம் கடந்து செல்கிறான். ஆதியும் மேலானதுமான இடத்தை அடைகிறான்.