Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடன்பற்று - தல் | kaṭaṉ-paṟṟu- v. intr. <>id. +. To recover a debt; கொடுத்தகடனை வாங்கிக்கொள்ளுதல். |
| கடன்பற்று | kaṭaṉ-paṟṟu n. <>id. +. Anything received as a loan; கடனாகப்பெற்ற பொருள். |
| கடன்மரம் | kaṭaṉ-maram n. <>கடல் +. Wooden sailing craft; மரக்கலம். கடன்மரங் கவிழ்ந்தெனக் கலங்கி (நற். 30). |
| கடன்மல்லை | kaṭaṉ-mallai n. <>id. + மல்லை. Classical name of an ancient town now known as the Seven Pagodas in the Madras Presidency; மகாபலிபுரம். (திவ். பெரியதி. 2, 6, 1. ) |
| கடன்முரசோன் | kaṭaṉ-muracōṉ n. <>id. + muraja. Kama who is reputed to use the sea as his drum; மன்மதன். (பிங்.) |
| கடன்முள்ளி | kataṉ-muḷḷi n. <>id. +. 1. Indian Nightshade; See முள்ளி. (புறநா. 24, உரை.) . 2. Andaman Indian Oak, See செம்முள்ளி,1. |
| கடன்முறி | kaṭaṉ-muṟi n. <>கடன் +. See கடன்சீட்டு. . |
| கடன்முறை | kaṭaṉ-muṟai n. <>id. +. Duty of showing courtesy to elders; பெரியோருக்குச் செய்யும் உபசாரம் கடன்முறைகள் யாவு மீந்து (கம்பரா திருவவ. 62) . |
| கடன்மை | kaṭaṉmai n. <>id. Condition, circumstance; தன்மை, அரக்கன்பின்னே தோன்றிய கடன்மை தீர (கம்பரா, விபீட.145) |
| கடன்வழி | kaṭaṉ-vaḻi n. <>id. +. See கடன்கட்டு, 2. (W.) . |
| கடன்வாங்கு - தல் | kaṭaṉ-vānku- v. tr. <>id. +. To borrow money, contract a debt; . |
| கடன்றானம் | kaṭaṉṟāṉam n. <>id. + sthāna. (Astrol.) The sixth sign from the rising one; இலக்கினத்துக்குஆறாமிடம். (சோதிட. சிந்.) |
| கடனடை - த்தல் | kaṭaṉ-aṭai- v. intr. <>id. +. To discharge, pay off, a debt; வாங்கின கடனைத் தீர்த்தல். |
| கடனண்டு | kaṭaṉaṇṭu n. <>கடல்+நண்டு. Sea crab, Cancer pagurus; நண்டுவகை. (பதார்த்த. 944.) |
| கடனாக்கு | kaṭaṉākku n. <>id. நாக்கு. 1. Curacoa Aloes, m. sh., Aloe vera-officinalis; சிவப்புச்சோற்றுக் கற்றாழை. 2. See கடனாக்குமீன். |
| கடனாக்குமீன் | kaṭaṉākku-mīṉ n. <>id. +. Flat fish, brownish or purplish black, attaining at least 16 in. in length, Pleuronectes erumei; எருமைநாக்குமீன். |
| கடனாய் | kaṭaṉāy n. <>id. + நாய். Seaotter. See மீனாய். (W.) . |
| கடனாளி | kaṭaṉ-āḷi n. <>கடன் + ஆள்-. One who is under an obligation to do a thing; debtor; கடன்பட்டவன். |
| கடனிவாரணம் | kaṭaṉivāraṇam n. <>id. +. Liquidation of debt, one of six kinds of nivāraṇam, q. v.; கடனை நிவிர்த்திசெய்கை . (W.) |
| கடனிறவண்ணன் | kaṭaṉiṟa-vaṇṇaṉ n. <>கடல்+நிறம்+. See கடல்வண்ணன். . |
| கடனிறு - த்தல் | kaṭaṉ-iṟu v. intr. <> கடன்+இறு3-. 1. To clear off a debt; கடனைக் கொடுத்தல். 2. To discharge an obligation, perform a duty; |
| கடனுரை | kaṭaṉurai n. <>கடல்+ நுரை. 1. Cuttle-bone, shell of Sepia; ஒருவகைக் கடல் மீனின் ஓடு. (மூ. அ.) 2. Kind of pastry; |
| கடனை | kaṭaṉai n. Prob. ghaṭanā. cf. Kur. kaṭan. Hardening of tissue in the body, Sclerosis; இறுகிய சவ்வு. |
| கடா - தல் | kaṭā- 5. v. tr. cf. கடவு-. To inquire, question; வினாதல். ஈங்குளவோவென்னக் கடாதலும் (காஞ்சிப்பு. திருநகர. 58). |
| கடா 1 | kaṭā n. <>கடா-. 1. Interrogation, question; வினா. கடாவிடை (ஞானா. 63, 10). 2. cf. G. gadār. Male of sheep or goat; 3. Sheep; 4. cf. M. kidāvu. He-buffalo; |
| கடா 2 | kaṭā n. <>kaṭāha.U. karāh.] Shallow iron boiler for boiling sugar; சர்க்கரை காய்ச்சும் பாத்திரம். |
| கடாக்களிறு | kaṭā-k-kaḷiṟu n. <>kaṭa +. Must elephant; மதயானை. கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் (குறள், 1087). |
| கடாக்கன்று | kaṭā-k-kaṉṟu n. <>கடா2 +. [Kur. khadd.] Young he-buffalo; ஆண் எருமைக்கன்று. (W.) |
| கடாக்குட்டி | kaṭā-k-kuṭṭi n. <>id. +. Lamb or kid; ஆட்டுக் குட்டி. (W.) |
| கடாகம் | kaṭākam n. <>kaṭāha. 1. Sphere, globe; அண்டகோளகை. (பிங்.) 2. Brass boiler; |
| கடாசலம் | katācalam n. <>kaṭa + a-cala. Elephant, lit., a trickling mountain; யானை. கடாசல வீருரி போர்த்தவர் (விநாயகபு. சண்முகர்.3). |
| கடாசு - தல் | kaṭācu- 5 v. tr. <>கடாவு-. Loc. 1. To drive, as a wedge, a nail; ஆணி ஆப்பு முதலியன அடித்தல். 2. To throw, fling; |
