Word |
English & Tamil Meaning |
|---|---|
| கட்டியடி - த்தல் | kaṭṭi-y-aṭi- v. tr. <>id.+. 1. To bind to a post and flog; தண்டனையாகக் கட்டிவைத்தடித்தல். அவன் திருடியதற்காகக் கட்டியடிக்கப்பட்டான். 2. To yoke the bulls to the plough for ploughing; |
| கட்டியடுப்பு | kaṭṭi-y-aṭuppu n. <>கட்டி+. Rectangular earthen oven in two parts, like the figure made by two brackets [ ]; ஒருவகை அடுப்பு |
| கட்டியம் | kaṭṭiyam n. <>கட்டு-. 1. Panegyric sung before a king; praises chanted before an idol; அரசர் முதலியோரைக் குறித்துச்சொல்லும் புகழ்த்தொடர். இருடியோர்கள் கட்டியம்பாட (திருப்பு. 730). 2. A kind of dancing; |
| கட்டியர் | kaṭṭiyar n. prob. kṣatriya. Title of a line of petty chiefs who ruled over the western part of Tamiḻakam; தமிழ்நாட்டின் மேல்பாலில் ஆட்சிபுரிந்த ஒருசார் சிற்றரசவகுப்பினர். பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் (சிலப். 25,157 ). |
| கட்டியாரம் | kaṭṭi-y-āram n. <>கெட்டி+ hāra. Thickly woven garland of flowers; நெருங்கத்தொடுத்த பூமாலை. Loc. |
| கட்டிரதம் | kaṭṭiratam n. <>கட்டு-+இரதம். Temporary car constructed specially for an occasion; கட்டுத்தேர். (W.) |
| கட்டில் | kaṭṭil n. <>id. cf. khaṭvā. [M. kaṭṭil] 1. Cot, bedstead, couch, sofa; மஞ்சம். நல்லகில் விம்மு கட்டில் (சீவக. 558). 2. Throne; |
| கட்டில்நாடா | kaṭṭil-nāṭā n. <>கட்டில்+. Broad tape for cots; கச்சுக்கட்டிலுக்குரிய அகல மானநாடா. |
| கட்டிலெய்து - தல் | kaṭṭil-eytu- nv. intr. <>id.+. See கட்டிலேறு-. கட்டிலெய்தினானைக் குறுங்கோழியூர்கிழார் பாடியது (புறநா, 17, உரைத்தலைப்பு). |
| கட்டிலேறு - தல் | kaṭṭil-ēru v. intr. <>id. +. To ascend the throne; சிங்காதனமடைதல். (தொல் சொல். 50, உரை.) |
| கட்டிவராகன் | kaṭṭi-varākaṉ n. <>கெட்டி +. A gold coin, the varākaṉ. கட்டிலோ மெத்தையோ கட்டிவாராகனே (குற்றா. குற.). |
| கட்டிவா[வரு] - தல் | kaṭṭi-vā- v. intr. <>கட்டு-+. To be profitable, as a transaction; இலாபங் கூடிவருதல் |
| கட்டிவிடு - தல் | kaṭṭi-viṭu- v. tr. <>id.+. 1. To pay up; செலுத்துதல். செலுத்தவேண்டிய தொகையைக் கட்டிவிட்டான். 2. To outcaste, to deprive a person of the services of village servants; 3. To spread a false report; |
| கட்டிவிழு - தல் | kaṭṭi-viḻu- v. intr. <>கட்டி +. 1. To suffer a miscarriage; கருவழிந்து விழுதல். (W.) 2. To be enlarged, as the spleen; |
| கட்டிளமை | kaṭṭiḷamai n. <>கட்டு+இளமை. Vigorous, virile, youth; காளைப்பருவம். |
| கட்டு - தல் | kaṭṭu- 5 v. [T. K. M. Tu. kaṭṭu.] tr. 1. To tie, bind, fasten, shackle; பிணித்தல். நாரினிற் கட்டி (நாலடி, 153). 2. To build, construct, fix, erect; 3. To establish, as a theory; 4. To hug, embrace; 5. To support, sustain; 6. To tie on, adorn with; 7. To wear, to be dressed in; to put on, as clothes; 8. To remit, pay up; 9. To acquire; 10. To fabricate, contrive, invent; 11. To harden, condense, consolidate; 12. To store, gather together; 13. To bind by spells, magic; 14. To suborn; 15. To compose, as verse; 16. To marry; 17. To win, checkmate, overcome; 18. To fill, as a tank with water; 19. To shut up, close up; 20. To export; 1. To harden, consolidate, form, as concretions; to congeal, coagulate; 2. To be congested, as the throat in acute pharyngitis; 3. To swell, as a boil, a tumour or an imposthume; 4. To be a bad omen, to portend misfortune; 5. To overspread, as clouds; 6. To be worth while, just paying; 7. To compare with, to be equal; |
