Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒத்தறு - த்தல் | ottaṟu- v. tr. <>ஒற்று + அறு2-. (Mus.) To measure time; தாளவரையறை செய்தல். (பிங்.) |
| ஒத்தன் | ottaṉ n. <>ஒருத்தன். Someone; ஒருவன். எல்லாவிஃதொத்தன் (கலித். 61). |
| ஒத்தாங்கு | ottāṅku adv. <>ஒத்த + ஆங்கு. See ஒத்தபடி. ஒத்தாங் கொறுப்பது வேந்து (குறள், 561). |
| ஒத்தாசை | ottācai n. [K. ottāse.] Aid, help, assistance; உதவி. Colloq. |
| ஒத்தாப்பு | ottāppu n. (J.) 1. Slanting shed in a field or garden to screen from the sun or wind; மறைவு. 2. Small building with a sloping roof on three out of its four sides; |
| ஒத்தாழிசை | ottāḻ-icai n. <>ஒத்து+ஆழ்+இசை. A kind of kali verse; கலிப்பாவின் வகை. (தொல். பொ. 442.) |
| ஒத்தி 1 | otti n. <>ஒருத்தி. A woman. இஃதொத்தி யென்செய்தாள்கொல் (கலித். 143). |
| ஒத்தி 2 | otti n. Corr. of ஒற்றி2. Vul. . |
| ஒத்திக்கை | ottikkai n. prob. ஒத்திருக்கை. 1. Resemblance, reciprocal adaptation; ஒப்பு. அதற்கும் இதற்கும் ஒத்திக்கை யிருக்கிறது. 2. Rehearsal; 3. Comparing; 4. Assistance; |
| ஒத்திசை | otticai n. <>ஒத்த+இசை. Harmony in music, symphony, concert; இசையின் இலயம். (W.) |
| ஒத்திடம் | ottiṭam n. <>ஒத்தடம். See ஒற்றடம் கொங்கையை யொத்திடங் கொடுத்து (தனிப்பா.). |
| ஒத்திரு - த்தல் | ottiru- v. <>ஒ-+. intr. To live in harmony, concord, friendship; -tr. To be similar to; இசைந்திருத்தல். போன்றிருத்தல். |
| ஒத்து 1 - தல் | ottu- 5 v. intr. <>ஒற்று-. 1. (Mus.) To keep time with cymbals or with the hands; தாளம்போடுதல். குணலைக் கொத்தின பாணி (கோயிற்பு. நட. 30). 2. To strike against each other, butt against, bunt; 3. To place in contact with; to foment; |
| ஒத்து 2 | ottu n. <>ஒத்து1-. 1. Time in music for singing and dancing; keeping time for singing; தாள வொற்று. ஒத்தளந்து (பரிபா. 12, 42). 2. A reed instrument concial in shape and enlarging downwards, used for playing the drone note accompanying a nāka-curam; 3. [T. ottulu.] A thin bangle; |
| ஒத்து 3 - தல் | ottu- 5 v. intr. <>T. ottu. [K. ottu.] To make room for; விலகுதல். ஒத்திநில். Colloq. |
| ஒத்துக்கொடு - த்தல் | ottu-k-koṭu- v. intr. <>ஒ-+. 1. To be answerable; to guarantee; to stand surety; பொறுப்பேற்றல். Colloq. 2. To render an account for matters entrusted, as to an accountant; |
| ஒத்துக்கொள்(ளு) - தல் | ottu-k-koḷ- <>id.+. tr. 1. To admit, concede; சம்மதித்தல். 2. To acknowledge one's mistake or confess one's guilt; 3. To credit; கணக்கிலேற்றுக்கொள்ளுதல். -intr. 1. To agree, concur- 2. To suit, to be adapted; |
| ஒத்துநட - த்தல் | ottu-naṭa- v. intr. <>id.+. 1. To walk together at the same pace; to march, as soldiers; ஒரேமாதிரியாய் நடத்தல். 2. To act agreebly to the wishes of another; live in harmoney; |
| ஒத்துப்பாடு - தல் | ottu-p-pāṭu- v. intr. <>id.+. 1. To sing in concert, in unison; இசையப்பாடுதல். 2. To assent to everything said by another, always say ditto to another's words; |
| ஒத்துப்பார் - த்தல் | ottu-p-pār- v.tr. <>id.+. To compare, collate; சரிபார்த்தல். எழுதியதை மூலப்பிரதியோடு ஒத்துப்பார்க்கிறான். |
| ஒத்துப்பிடி - த்தல் | ottu-p-piṭi- v. intr. <>ஒத்து+. To sound the keynote with the ottu or drone; ஒத்தூதுதல். (W.) |
| ஒத்துப்போடு - தல் | ottu-p-pōṭu- v. intr. <>id.+. To keep the time with cymbals as an accompaniment to singing or dancing; தாளம் போடுதல். |
| ஒத்துவா[வரு] - தல் | ottu-vā- v. intr. <>ஒ-+. To come to an agreement; to become conformable; இணங்கிவருதல். |
| ஒத்துவாக்கியம் | ottu-vākkiyam n. Corr of ஒத்தவாக்கியம். ஒத்தவாக்கியம். |
| ஒத்துவாழ் - தல் | ottu-vāḻ- v. intr. <>ஒ-+. To live in harmony, as a family, relations, fellow-servants; மனமொத்து வசித்தல். |
