Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒட்டுத்துத்தி | oṭṭu-t-tutti n. <>id.+. 1. Angle-leaved burr mallow, s.sh., Urena lobata; செடிவகை. (L.) 2. Lobe-leaved burr mallow, s. sh., Urena sinuata; |
| ஒட்டுத்துணி | oṭṭu-t-tuṇi n. <>id.+. Piece of cloth for patching; ஒட்டிவைத்துத் தைக்கப்படுந் துணித்துண்டு. |
| ஒட்டுத்தையல் | oṭṭu-t-taiyal n. <>id.+ Patching needle work; ஒட்டுத்துணியிட்டுத் தைக்குந் தையல். |
| ஒட்டுநர் | oṭṭunar n. <>ஒட்டு-. Friends, adherents; மித்திரர். (திவா.) |
| ஒட்டுப்பழம் | oṭṭu-p-paḻam n. <>ஒட்டு+. Graft fruit, esp. the mango; ஒட்டுமரத்தின்பழம். |
| ஒட்டுப்பற்று | oṭṭu-p-paṟṟu n. <>id.+. Attachment, tie of affection, as to one's family; ஆசாபாசம். அவனுக்குக் குடும்பத்தில் ஒட்டுப்பற்றில்லை. |
| ஒட்டுப்பிசின் | oṭṭu-p-piciṉ n. <>id.+. Bird-lime; பக்ஷிகளைப்பிடிப்பதற்கு வைக்கப்படும் பிசின்தடவிய கண்ணி. Loc. |
| ஒட்டுப்புதவம் | oṭṭu-p-putavam n. <>id.+. Double door; இரட்டைக்கதவு. ஒட்டுப்புதவமொன் றுண்டு சிலப். 11, 120). |
| ஒட்டுப்புல் | oṭṭu-p-pul n. <>id.+. Stick-mg-grass, Setaria verticillata; புல்வகை. (W.) |
| ஒட்டுப்புழு | oṭṭu-p-puḻu n. <>id.+. Parakeet-bur, a wide-spread weed. See புறாமுட்டி. (L.) . |
| ஒட்டுப்போடு - தல் | oṭṭu-p-pōṭu- v. intr. <>id.+. 1. To stick on, as a piece; to sew on, as a patch; துண்டுவைத்து இணைத்தல். 2. To lie in wait; to bide one's time; |
| ஒட்டுமயிர் | oṭṭu-mayir n. <>id.+. (W.) 1. Hair clipped or new grown about the tuft on the head; குடுமியுடன் கூடாத மயிர். 2. False hair; |
| ஒட்டுமொத்தம் | oṭṭu-mottam n. <>id.+. Grand total; முழுமொத்தம். Loc. |
| ஒட்டுரிமை | oṭṭurimai n. <>id.+. See ஒட்டுடந்தை, 2. (W.) . |
| ஒட்டுவட்டில் | oṭṭu-vaṭṭil n. <>id.+. Small vessel for holding water, etc., placed before the idol in worship; ஆராதனைவட்டில். (S.I.I. ii, 3.) |
| ஒட்டுவாரொட்டி | oṭṭuvār-oṭṭi n. <>ஒட்டு.+. See ஒட்டுவியாதி. Colloq. . |
| ஒட்டுவிடு - தல் | oṭṭu-viṭu- v. intr. <>ஒட்டு+. 1. To become loose, disjoined as boards that had been glued together; பொருத்து நீங்குதல். 2. To cease to be a friend or kinsman; to become dissociated; |
| ஒட்டுவித்தை | oṭṭu-vittai n. <>ஒட்டு-+ The magic art of rendering persons incapacitated to move and making them transfixed to the ground; இடத்தைவிட்டுப் பெயராதிருக்கச்செய்யும் வித்தை. |
| ஒட்டுவியாதி | oṭṭu-viyāti n. <>id.+. Contagious disease; தொற்று நோய். |
| ஒட்டுவேலை | oṭṭu-vēlai n. <>id.+. 1. Joining, sticking on, patching; இணைக்கும்வேலை. (W.) 2. Deceptive, dishonest work; 3. Terracing; |
| ஒட்டுவை - த்தல் | oṭṭu-vai- v. intr. <>ஒட்டு+. 1. To set bird-lime in order to ensnare birds; பக்ஷிகளைப்பிடிக்க ஒட்டுப்பிசின் வைத்தல். 2. To swear, take an oath; 3. To dig trenches or moats round a city; |
| ஒட்டுறவு | oṭṭuṟavu n. <>ஒட்டு- + உறவு. Close relationship; நெருங்கிய சம்பந்தம். Colloq. |
| ஒட்டை 1 | oṭṭai n. <>ஒற்றை. See ஒட்டைச்சாண். மன்னிய வொட்டைமாத்திரையாகி வயங்குவன் (திருக்காளத். பு. 6, 18). |
| ஒட்டை 2 | oṭṭai n. <>uṣṭra. Camel; ஒட்டகம். இலகெயிறெட்டைக்களம் (கோயிற்பு. நட. 30). |
| ஒட்டைச்சாண் | oṭṭai-c-cāṇ n. <>ஒற்றை+. The space from the point of the thumb to that of the forefinger when extended; short span; சிறுசாண். |
| ஒட்டொட்டி | oṭṭoṭṭi n. <>ஒட்டு-+. A kind of grass with prickly seeds which stick to the clothes, Desmochacta attopurpurea; ஒட்டங்காய்ப்புல். (J.) |
| ஒட்டோலக்கம் | oṭṭōlakkam n. [T. oddō-lagamu, K. oddōlaga.] 1. Great assembly; பெருங்கூட்டம். 2. Show, pomp. magnificence; |
