
அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநபேக்ஷ்ய ச பௌருஷம்। மோஹாதாரப்யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே॥ 18.25 ॥ |
செயலின் விளைவையும் நஷ்டத்தையும் துன்பத்தையும் சொந்த ஆற்றலையும் எண்ணி பாராமல் மனமயக்கத்தால் தொடங்கபடுவது தாமச செயல்.
முக்தஸங்கோ அநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமந்வித:। ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே॥ 18.26 ॥ |
பற்றற்றவன், அகங்காரம் இல்லாதவன், உறுதியும் ஊக்கமும் உடையவன், வெற்றி தோல்வியில் மாறுபடாதவன் சாத்வீக கர்த்தா.
ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோ அஷுசி:। ஹர்ஷஷோகாந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித:॥ 18.27 ॥ |
ஆசை வசபட்டவன், வினைபயனை நாடுபவன், கருமி, துன்பம் செய்பவன், தூய்மையற்றவன், மகிழ்ச்சியும் கவலையும் கொள்பவன் ராஜச கர்த்தா.
அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: ஷடோ நைஷ்க்ருதிகோ அலஸ:। விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே॥ 18.28 ॥ |
ஒருமை படாத மனத்தினன், விவேகமற்றவன், முரடன், வஞ்சகன், பிறரது வேலையை கெடுப்பவன், சோம்பேறி, கவலையில் மூழ்கியவன், காலதாமதம் செய்பவன் தாம்ச கர்த்தா.