
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்। யஜ்ஞோ தாநம் தபஷ்சைவ பாவநாநி மநீஷிணாம்॥ 18.5 ॥ |
வழிபாடு, தானம், தவம் ஆகிய செயல்கள் விடுவதற்கு உரியவை அல்ல. இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும். இவை சான்றோர்களை( அதாவது உரிய விதத்தில் செய்பவர்களை ) புனிதபடுத்துபவை.
ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச। கர்தவ்யாநீதி மே பார்த நிஷ்சிதம் மதமுத்தமம்॥ 18.6 ॥ |
அர்ஜுனா ! இந்த செயல்களையும் கூட பற்றை விட்டும் பலனை எதிர்பாராமலும் செய்ய வேண்டும் என்பது எனது உறுதியானதும் மேலானதுமான கருத்தாகும்.
நியதஸ்ய து ஸம்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே। மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித:॥ 18.7 ॥ |
விதித்த கடமையை விடுவது சரியல்ல. மனத்தெளிவின்மை காரணமாக அவ்வாறு விடுவது தாமச தியாகம்.
து:கமித்யேவ யத்கர்ம காயக்லேஷபயாத்த்யஜேத்। ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்॥ 18.8 ॥ |
துன்பமாக இருக்கிறது என்ற காரணத்தாலும், உடம்பிற்கு தொந்தரவு என்ற பயத்தாலும் செயல்களை விடுவது ராஜச தியாகம். இந்த தியாகத்தினால் தியாகத்திற்கு உரிய பலன் கிடைப்பதில்லை.