
ஸம்ஜய உவாச। |
இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மந:। ஸம்வாதமிமமஷ்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம்॥ 18.74 ॥ |
சஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு கிருஷ்ணருக்கும் சிறந்தவனாகிய அர்ஜுனனுக்கும் நடைபெற்றதும் மயிர்கூச்செரிவதும் அற்புதமானதுமான உரையாடலை நான் கேட்டேன்.
வ்யாஸப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம் பரம்। யோகம் யோகேஷ்வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கதயத: ஸ்வயம்॥ 18.75 ॥ |
இந்த மேலான சிறந்த யோகத்தை யோகேசுவரனாகிய கிருஷ்ணர் தாமே சொல்வதை வியாசரின் அருளால் நான் நேரடியாக கேட்டேன்.
ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதமிமமத்புதம்। கேஷவார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு:॥ 18.76 ॥ |
மன்னா ! கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த இந்த புண்ணியமான அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன்.
தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே:। விஸ்மயோ மே மஹாந்ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந:॥ 18.77 ॥ |
மன்னா ! ஹரியின் அந்த அற்புத வடிவத்தை எண்ணியெண்ணி எனக்கு பெரும் வியப்பு உண்டாகிறது. நான் மேலும் மேலும் களிப்படைகிறேன்.