
ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஷரணம் வ்ரஜ। அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷ்யயிஷ்யாமி மா ஷுச:॥ 18.66 ॥ |
எல்லா கர்மங்களையும் அறவே விட்டு என்னை மட்டுமே சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன் வருந்தாதே.
இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந। ந சாஷுஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோ அப்யஸூயதி॥ 18.67 ॥ |
தவமில்லாதவன், பக்தி இல்லாதவன், சேவை செய்யாதவன், என்னை நிந்திப்பவன் – இவர்களுக்கு ஒரு போதும் நீ இந்த கீதா உபதேசத்தை சொல்ல கூடாது.
ய இதம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி। பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஷய:॥ 18.68 ॥ |
யார் இந்த மேலான ரகசியத்தை என் பக்தர்களுக்கு சொல்கிறானோ, என்னிடம் மேலான பக்தி கொள்கிறானோ அவன் சந்தேகமில்லாமல் என்னையே அடைகிறான்.
ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஷ்சிந்மே ப்ரியக்ருத்தம:। பவிதா ந ச மே தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி॥ 18.69 ॥ |
மனிதர்களுள் எனக்கு மிகவும் பிரியமானதை செய்பவனும் மிகவும் பிரியமானவனும் அவனை விட வேறு யாரும் இல்லை. இருக்கவும் மாட்டான்.