ஸமது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாஷ்மகாம்சந:। துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி:॥ 14.24 ॥ |
சொந்த இயல்பில் நிலைத்திருப்பவன், துன்பம்- இன்பம், மண், கல், பொன், இனியது, இனிமையற்றது, இகழ்ச்சி – புகழ்ச்சி, ஆகியவற்றை சமமாக கருதுபவன், தெளிந்த அறிவுடையவன் --- இத்தகையவன் மூன்று குணங்களையும் கடந்தவன்.
மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ:। ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே॥ 14.25 ॥ |
மானத்திலும் அவமானத்திலும் சமமாக இருப்பவன், நண்பனிடமும் பகைவனிடமும் சமமாக இருப்பவன், தானாக முனைந்து செயலில் ஈடுபடுவதை தவிர்ப்பவன் குணங்களை கடந்தவன் என்று சொல்லபடுகின்றான்.
மாம் ச யோ அவ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே। ஸ குணாந்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே॥ 14.26 ॥ |
மாறாத பக்தி யோகத்தால் யார் என்னை வழிபடுகிறானோ, அவன் இந்த குணங்களை முற்றிலும் கடந்து, இறைநிலையை அடைவதற்கு தகுதி பெறுகிறான்.