॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத சதுர்தஷோ அத்யாய:। குணத்ரயவிபாக யோகம்(மூன்று குணங்கள்) |
ஸ்ரீபகவாநுவாச। |
பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்। யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா:॥ 14.1 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: எதை அறிந்து, எல்லா முனிவர்களும் மேலான நிலையை அடைந்தார்களோ, ஞானங்களுள் மிக சிறந்ததும் மேலானதுமான அந்த ஞானத்தை மீண்டும் சொல்கிறேன்.
இதம் ஜ்ஞாநமுபாஷ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா:। ஸர்கே அபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச॥ 14.2 ॥ |
இந்த ஞானத்தை பெற்று எனது நிலையை அடைந்தவர்கள் படைப்பின்போது பிறப்பதில்லை. பிரளய காலத்திலும் கலங்குவதில்லை.
மம யோநிர்மஹத் ப்ரஹ்ம தஸ்மிந்கர்பம் ததாம்யஹம்। ஸம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத॥ 14.3 ॥ |
அர்ஜுனா ! பெரியதான மாயை எனது கருப்பை. அதில் நான் விதையை வைக்கிறேன். அதிலிருந்து எல்லா உயிர்களின் உற்பத்தி உண்டாகின்றன.
ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா:। தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா॥ 14.4 ॥ |
அர்ஜுனா ! கருப்பைகளில் பிறக்கின்ற உயிரினங்கள் அனைத்திற்கும் பிறப்பிடம் பெரியதான மாயை. விதையை கொடுக்கின்ற தந்தை நான்.