
ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கிஷு ஜாயதே। ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே॥ 14.15 ॥ |
ரஜோ குணம் ஓங்கிய நிலையில் இறப்பவன் செயல் நாட்டம் உடையவர்களிடம் பிறக்கிறான். தமோ குணம் ஓங்கிய நிலையில் இறப்பவன் முட்டாள்களின் கருவில் பிறக்கிறான்.
கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம்। ரஜஸஸ்து பலம் து:கமஜ்ஞாநம் தமஸ: பலம்॥ 14.16 ॥ |
நற்செயல்களின் பலனாக அகநாட்டமும் தூய்மையும் உண்டாகிறது. ரஜோ குண செயல்களின் பலன் துன்பம், தமோ குண செயல்களின் பலனோ அறியாமை என்கிறார்கள்.
ஸத்த்வாத்ஸம்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச। ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோ அஜ்ஞாநமேவ ச॥ 14.17 ॥ |
சத்வ குணத்திலிருந்து ஞானம் பிறக்கிறது. ரஜசிலிருந்து பேராசை பிறக்கிறது. தமசிலிருந்து அறியாமையும் கவனமினமையும் மனமயக்கமும் உண்டாகின்றன.
ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா:। ஜகந்யகுணவ்ருத்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா:॥ 14.18 ॥ |
சத்வ குணத்தினர் உயர் லச்சியங்களை நோக்கி போகிறார்கள். ரஜோ குணத்தினர் இடையில் நிற்கிறார்கள். இழிந்த குணமான தமோ குணத்தினர் கீழானவற்றை நாடுகிறார்கள்.
நாந்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஷ்யதி। குணேப்யஷ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோ அதிகச்சதி॥ 14.19 ॥ |
மனிதன் குணங்களை தவிர வேறு கர்த்தாவை எப்போது காண்பதில்லையோ, குணங்களுக்கு மேலானதாக அறிகிறானோ அவன் எனது சொரூபத்தை அடைகிறான்.