வேலூர் கலகம், முறையாக திட்டமிடப்படாவிட்டாலும் அப்பகுதியில் மீண்டும் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. பூலித்தேவர், கான்சாகிப், சுட்டபொம்மன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் போன்றோருக்கு ஏற்பட்ட கதியை சிப்பாய்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆகவே, பிரிட்டிஷாரைப்பற்றிய ஒரு கசப்புணர்வு அவர்களுக்கு இருந்தது. இத்தகைய காரணங்களால், வேலூர்க்கலகம் மூண்டது.
கலகத்தின் போக்கு
ஜூலை 10ம் நாள் விடியற்காலை முதல் மற்றும் 23ம் படைப்பிரிவை சேர்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தோற்றுவித்தனர். இப்படைப் பிரிவுகளின் இராணுவ அதிகாரி கர்னல் பான்கோர்ட் இக்கலகத்திற்கு முதல் பலியானார். 23வது படைப்பிரிவின் இராணுவ அதிகாரியான கர்னல் மி கேரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார். இக்கலகத்தின் போது அடுத்ததாக கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஆம்ஸ்ட்ராங் ஆவார். ஏறத்தாழ 12க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
வேலூர் கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் கூட்ஸ் 14 மைல்களுக்கு அப்பாலுள்ள இராணிப்பேட்டைக்கு விரைந்து சென்று அங்கிருந்த இராணுவத்தளபதி கர்னல் ஜில்லஸ்பியிடம் காலை மணியளவில் வேலூர் புரட்சியைப் பற்றி தெரிவித்தார். சுமார் காலை 9 மணியளவில் ஜில்லஸ்சி இராணுவ படையுடன் வேலூர் கோட்டையை அடைந்தார்.