மகாராஷ்டிரத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜோதிபா கோவிந்த பூலே.
![]() |
ஜோதிபா பூலே |
முஸ்லிம் சீர்திருத்த இயக்கங்கள்
தொடக்கத்தில் மேலை நாட்டுக் கல்வியை முஸ்லிம்கள் புறக்கணித்தமையால் அவர்களிடையே சீர்திருத்த இயக்கங்கள் சற்று தாமதமாகவே தோன்றின. அத்தகைய முதல் முயற்சி 1863ல் கல்கத்தாவில் தோற்றுவிக்கப்பட்ட முகமதிய இலக்கிய கழகம் ஆகும். ஆங்கிலக் கல்வியையும் மேலை நாட்டு அறிவியலையும் பரப்புவதே இதன் முக்கிய நோக்கமாகும். வங்காளத்தில் இந்த அமைப்பு பல பள்ளிகளை நிறுவியது.
![]() |
சையது அகமது கான் |
அலிகார் இயக்கத்தை தோற்றுவித்தவர் சர் சையது அகமது கான் (1817 - 98) ஆவார். முஸ்லிம்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக இது தோற்றுவிக்கப்பட்டது. இடைக்காலத்திய பிற்போக்குத் தன்மையை போக்கி சமயத்தில் முற்போக்கு சிந்தனைகளை அவர் ஏற்படுத்தினார். முஸ்லிம்களிடையே தாராளக் கருத்துக் களைப் பரப்புவதற்காக 1866ல் அவர் முகமதிய கல்விக் கழகத்தை தோற்றுவித்தார். முஸ்லிம்களுக்கு ஆங்கிலக் கல்வி புகட்டுவதற்காக 1875ல் அலிகாரில் அவர் ஒரு பள்ளியை நிறுவினார். இதுவே பின்னர் முகமதிய ஆங்கிலேய கீழ்த்திசைக் கல்லூரியாகவும், தற்போதைய அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமாகவும் வளர்ச்சி அடைந்தது.