1867ல் பம்பாயில் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் என்பவரால் பிரார்த்தனை சமாஜம் தோற்றுவிக்கப்பட்டது. இது பிரம்ம சமாஜத்திலிருந்து உதயமானதாகும்.
![]() |
எம்.ஜி.ரானடே |
![]() |
ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் |
சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (1863 - 1902) ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சரின் முக்கிய புகழ்பெற்ற சீடராக அவர் விளங்கினார். கல்கத்தாவில் செல்வமிக்க வங்காளக் குடும்பத்தில் பிறந்த நரேந்திரநாத் தத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பயின்றார். 1886ல் நரேந்திரநாத் தத்தா துறவறம் பூண்டார். விவேகானந்தர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். வேதாந்த தத்துவத்தை அவர் போதித்தார். ஜாதிமுறையை சாடிய அவர் அப்போது இந்து சமயத்தில் ஊறிக்கிடந்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கண்டனம் செய்தார் .
![]() |
சுவாமி விவேகானந்தர் |
விவேகானந்தர் வலிமை மற்றும் தன்னம்பிக்கையை தமது அடிப்படை கொள்கைகளாகக் கொண்டிருந்தார். ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கையை மேம்படுத்த உழைக்குமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். மனிதனுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு ஆற்றும் சேவை என்று அவர் திடமாக நம்பினார்.
1897ல் ஹவுராவிலுள்ள பேலூர் என்ற இடத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தை அவர் தோற்றுவித்தார். அது ஒரு சமூக சேவை மற்றும் அறக்கொடை அமைப்பாகும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் போன்றவற்றை நிறுவி, அவற்றின் மூலம் மக்களுக்கு உதவியும் சமூகத்திற்கு சேவையும் செய்வதே இந்த இயக்கத்தின் குறிக்கோளாகும்.