வடமேற்கு இந்தியாவிளிருந்த பெஷாவர் மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதியே காந்தாரம் எனப்பட்டது. அப்பகுதியே காந்தாரக் கலையின் தாயகமாகும். காந்தாரக் கலையின் மிகச்சிறந்த சிற்பங்கள் கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டன. இந்தோ கிரேக்கர்களின் ஆட்சிக் காலத்தில் காந்தாரக் கலை தோன்றியது என்றாலும், சாகர்களும், குஷானர்களும் காந்தாரக் கலையைப் போற்றி வளர்த்தனர். இதில் கனிஷ்கரின் பங்கு போற்றத்தக்கதாகும். இந்தியக்
காந்தாரக் கலை |
- மனித வடிவத்தை அதன் தசைகள், மீசையுள்ளிட்ட சிகைமடிப்புகள் தெரியும்படி உருவத்தைப் படைத்தல்
- தடித்த ஆடைகள் அவற்றின் மடிப்புகள் தெரியும்படி வடிவமைத்தல்
- அழகான சிற்பங்கள், விவரமான ஆபரணங்கள் மற்றும் அடையாளம் மூலமாக கருத்தை உணர்த்துதல்.
காந்தாரக் கலை |
- புத்தர் உருவம் பரிணாம வளர்ச்சிபெற்றது.
கி.பி. முதல் நான்கு நூற்றாண்டுகளில் பல்லாயிரக்கணக்கான மடாலயங்கள் கட்டப்பட்டன. பெஷாவர், ராவல்பிண்டி ஆகிய பகுதிகளைச் சுற்றி மட்டும் பதினைந்து மடலாயங்களின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுப்பப்பட்ட புத்தசமய ஸ்தூபிகளில் கிரேக்க - ரோமானிய கட்டிடக் கலையின் தாக்கத்தை காணமுடிகிறது. ஸ்தூபியின் உயரம் கூடுதலாகவும், அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்தும் இவை அமைக்கப்பட்டன. இதனால், ஸ்தூபிகளின் அழகு மேலும் அதிகரித்தது.
மதுரா கலைப்பாணி
தற்கால உத்திரப் பிரதேசத்திலுள்ள மதுரா என்ற இடத்தில் தோன்றி வளர்ந்த கலையே மதுரா கலைப்பாணி என்று அழைக்கப்படுகிறது. கி.பி. முதல் நூற்றாண்டில் அது புகழ்பெற்று விளங்கியது. தொடக்கத்தில் மதுரா கலைப்பாணி தன்னிச்சையாக உள்நாட்டு கலைநயத்துடன் வளர்ச்சி பெற்றது. புத்தரது உருவங்களில், குறிப்பாக அவரது முகம் ஆன்மீகப் பொலிவு நிறைந்து காணப்பட்டது. இத்தகைய பொலிவு காந்தார சிற்பங்களில் காணப்படவில்லை. சிவன் - பார்வதி, விஷ்ணு லட்சுமி உருவங்களும் மதுராவில் செதுக்கப்பட்டன. யக்ஷினிகள், அப்சரஸ்கள் ஆகிய உருவங்கள் மதுரா கலைப்பாணியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
கனிஷ்கரின் பின்தோன்றல்களும் குஷானர் ஆட்சியும் முடிவும்
கனிஷ்கருக்குப்பின் ஆட்சிக்கு வந்தோர் சுமார் நூற்றியம்பது ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர். கனிஷ்கரது புதல்வரான ஹிவிஷ்கர் பேரரசை அப்படியே கட்டிக்காத்தார். அவரது ஆட்சிக் காலத்தில் மதுரா சிறப்பு வாய்ந்த நகரமாகத் திகழ்ந்தது. கனிஷ்கரைப் போலவே, அவரும் புத்தசமயத்தை ஆதரித்தார். குஷானர்களின் கடைசி முக்கிய ஆட்சியாளர் வாசுதேவர். அவரது காலத்தில் குஷான அரசின் பரப்பு குறுகிப் போயிருந்தது. அவரது கல்வெட்டுக்கள் மதுராவைச் சுற்றியே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர் சிவனை வழிபட்டதாகத் தெரிகிறது. வாசுதேவருக்குப் பிறகு சிறுசிறு குஷான இளவரசர்கள் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் ஆட்சி புரிந்தனர்.