இந்தியாவுக்கு ரஷ்ய படையெடுப்பு என்ற அச்சம் இருப்பதை முதலில் ஊகம் செய்தவர் வில்லியம் பெண்டிங் பிரபு. எனவே, பஞ்சாப் அரசர் மகாராஜா இரஞ்சித் சிங் மற்றும் சிந்துப் பகுதியின் அமீர்கள் ஆகியோருடன் நட்புறவு மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்தார். இந்தியாவிற்கும் எந்தவொரு படையெடுப்பாளருக்கும் நடுவே ஆப்கானிஸ் தான் இடைப்படு நாடாக இருக்க வேண்டும் என்றும் பெண்டிங்
![]() |
இரஞ்சித் சிங் |
மேலும் வணிகத் தொடர்புடைய உடன்படிக்கை ஒன்றுக்கும் இரஞ்சித் சிங்குடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சிந்துவின் அமீர்களிடமும் இத்தகைய நட்பு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.
1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டத்தில் இருபது ஆண்டுகளுக்குப்பிறகு வணிகக் குழுவின் பட்டயம் புதுப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, 1793 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறப்பட்டது. வணிகக் குழுவின் ஆயுட்காலத்தை மேலும் இருபது ஆடுகளுக்கு நீட்டிப்பு செய்த இச்சட்டம் ஆட்சியில் சில சிறு மாறுதல்களையும் செய்தது. 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம், இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக வணிகக் குழு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கவேண்டும் என்று விதித்தது. மேலும் இருபது ஆண்டுகளுக்கு வணிகக் குழுவின் பட்டயம் புதுப்பிக்கப்பட்டது.
1833 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பட்டயச் சட்டம் முக்கியத்துவம் பெற்றதாகும். கிழக்கிந்திய வணிகக் குழுவின் அதிகார வரம்பெல்லையை இது வரையறை செய்தது. இச்சட்டத்தின் விதிகள் பெந்தாம் என்பவரின் தாராள மற்றும் பயன்பாட்டு தத்துவங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.