Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடியன் | kaṭiyaṉ n. <>கடு-மை. Cruel, hard- hearted person; கடுமையுள்ளவன், இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் (குறள், 564) . |
| கடியஸ்தம் | kaṭi-y-astam n. <>kaṭi + hasta. Arms akimbo; இடையில்வைத்த கை. |
| கடியாரச்சங்கிலி | kaṭiyāra-c-caṅkili n.<>கடியாரம் +. Watch-chain; கைக்கடியாரத்தில் மாட்டியுள்ள சங்கிலி. 2. Golden chain, necklace worn by women in one or more strands, resembling a watch-chain; |
| கடியாரசரம் | kaṭiyāra-caram n. <>id. +. Gold chain . See கடியாரச்சங்கிலி. Mod. . |
| கடியாரத்தோடு | kaṭiyāra-t-tōṭu n. <>id. +. Large earring in gold set with stones, the decorated form of kammal; கம்மல்வகை. |
| கடியாரம் | kaṭiyāram n. <>ghaṭikā-yantra. [T. gadiyāramu.] See கடிகாரம். . |
| கடியாரவட்டிகை | kaṭayāra-v-aṭṭikai n. <>கடியாரம் + அட்டிகை. Woman's necklace made of gold wire; அட்டிகைவகை. |
| கடியிரத்தம் | kaṭiyirattam n. spreading Hogweed. See மூக்கிரட்டை. (மலை.) . |
| கடியிருக்கை | kaṭi-y-irukkai n. <> கடி5 +. Wedding pavilion; விவாகமண்டபம். அருங்கடியிருக்கை யுளமா நல்கினான் (கந்தபு. வரைபுனை.19). |
| கடிரோமம் | kaṭirōmam n. Tuber of common sedge; See கோரைக்கிழங்கு. (மலை.) . |
| கடிலா | kaṭilā n. See கடியிரத்தம். (மூ. அ.) . |
| கடிவாய் | kaṭi-vāy n. <>கடி1- +. Bite, lips of a wound caused by a bite; கடித்த இடம் கடிவாயில் மருந்து வை. |
| கடிவாளப்புண் | kaṭivāḷa-p-puṇ n. <>கடிவாளம் +. Eczema; புண்வகை. |
| கடிவாளம் | kaṭi-vāḷam n. <>கடி1-. [T. kaḷḷiyamu, K. kadiyaṇa, M. kadivāḷam, Tu. kadivāṇa.] Horse's bit, bridle; குதிரைவாயில் மாட்டப்படும் இருப்புக்கருவி. (திவா.) |
| கடிவாளம்வெட்டல் | kaṭivāḷam-veṭṭal n. <>கடிவாளம்+. Slackening and pulling, jerking the reins of a horse; களடிவாளவாரைத் தளர்த்தியிழந்து விடுகை. (W.) |
| கடிவாளவார் | kaṭivāḷa-vār n.<>id. +. Bridle reins; லகாம். (W.) |
| கடிவை | kaṭivai n. See கடிறு. (திவா.) . |
| கடிறு | kaṭiṟu n. <>களிறு. Elephant; யானை. கடிறுபலதிரி கானதரிடை (திவ். பெரியாழ். 3,2,6). |
| கடினக்காவல் | kaṭiṉa-k-kāval n.<>kaṭhina +. Rigorous imprisonment; கடுங்காவல். |
| கடினக்கைது | kaṭiṉa-k-kaitu n. <>id. + U. kaid. See கடினக்காவல். . |
| கடினப்புற்று | kaṭiṉa-p-puṟṟu n. <>id. +. Scirrhus; hard, cancerous tumour; வன்புற்றுப் புண். (இங். வை.) |
| கடினம் | kaṭiṉam n. <>kaṭhina. 1. Hardness, firmness; வன்மை. 2. Severity, cruelty, harshness, rigorousness; 3. Difficulty; 4. Roughness, ruggedness; |
| கடிஸ்தலம் 1 | kaṭi-stalam n. <>U.gadi+ stalam. A subdivision of nāṭu, a division of the territory occupied by the Iḻavas in the Tinnevelly District; ஈழுவர் வாழும் நிலப்பகுதி. (G. Tn. D. i, 145.) |
| கடிஸ்தலம் 2 | kaṭi-stalam n. <>kaṭi +. Waist; இடுப்பு. |
| கடு 1 - த்தல் | kaṭu- 11v. [M. kadu.] intr. 1. To throb and pain, as from a sting, a venomous bite, a prick or toothache; நோவெடுத்தல். 2. To ache, as from rheumatism, colic or dysentery to pain, as the leg from walking, the head from carrying a load, the arm from writing; 3. To be too highly seasoned, pungent, as curry; 4. To move swiftly, run fast; 5. To be full; to pervade; 1. To be angry, indignant, wroth; 2. To dislike, detest, abhor; 3. To doubt; 4. To resemble; |
| கடு 2 - தல் | kaṭu- 6 v. tr. <>கள்-. To weed; களைபிடுங்குதல். கடைசியர்கள் கடுங்களையின் (பெரியபு. மானக்கஞ். 2). |
| கடு 3 | kaṭu n.<> கடு1-. cf. kaṭu. [M.kadu.] 1.Chebulic myrobalan See கடுக்காய்.2 கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில் (மலைபடு.14). 2. Bitterness; 3. Pungency; 4. Poison, venom; 5. Snake; 6. Crocodile; 7. Thorn; 8. Indian Nightshade. See முள்ளி. (மலை.) 9. Astringency; 10. Round berried cuspidate-leaved Lingam Tree. See மாவிலங்கை. (மலை.) |
