Word |
English & Tamil Meaning |
|---|---|
| கஞறம் | kaaṟam n. prob. கஞல்-. Fermented liquor, toddy; கள். (சது.) |
| கட்கட்டி | kaṭ-kaṭṭi n. <> கண் +. Sty, small tumour in the eyelid; கண்ணில்வரும் பரு. (J.) |
| கட்கண் 1 | kaṭ-kaṇ n. <>id. +. The physical eye, opp. to உட்கண்; ஊனக்கண், கட்கண்ணாற் காணாத வவ்வுரு (திவ். இயற். பெரியதிருவந். 28). |
| கட்கண் 2 | kaṭ-kaṇ adv. <>id. + கண் part. At all points, throughout; அங்கங்கே, கவைபடு நெஞ்சங் கட்க ணகைய (அகநா. 339). |
| கட்கத்தம்பம் | kaṭka-t-tampam n. <>khadga +. Art of nullifying the action of the sword, one of aṟupattu-nālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலையுள் வாளை வலியிலதாகச்செய்யும் வித்தை. (W.) |
| கட்கம் 1 | kaṭkam n. <>khadga. 1. Sword; வாள். (திவா.) 2. Horn of the rhinoceros; |
| கட்கம் 2 | kaṭkam n. <>kakṣa. Arm-pit; அக்குள். கதிர்மணி கட்கத்துத் தெறிப்ப (பெருங். உஞ்சைக், 38. 333). |
| கட்காஞ்சி | kaṭ-kāci n. <>கள்+. (Puṟap.) Theme of a king's entertaining his troops with toddy before leading them to a campaign; அரசன் வீரர்க்கு உண்ண மதுவளிக்கும் புறத்துறை. (பு. வெ.4. 21.) |
| கட்கிலி | kaṭkili n. <>கட்கு + இலி. One who is invisible; God as the unseen providence; கண்ணுக்குப் புலப்படாதவன். கட்கில¦ யுன்னைக் காணுமா றருளாய் (திவ். திருவாய், 7, 2, 3, ) |
| கட்குடியர் | kaṭ-kuṭiyar n. <>கள்+. Those who drink; drunkards; மதுபானஞ்செய்வோர். |
| கட்குத்திக்கள்வன் | kaṭ-kutti-k-kaḷvaṉ n. <>கண்+. Very skilful deceiver; one who is able to hoodwink, or throw dust into the eyes of even a wide-awake person; விழித்திருக்கும் போதே ஏமாற்றுபவன். (கலித. 108, 50.) |
| கட்சம் | kaṭcam n. cf. kakṣa. 1. Treatise, as Nava-k-kiraka-kaṭcam, Tiru-mūla-kaṭcam; நூல். (W.) 2. A mineral poison; See சங்கபாஷணம். (மூ. அ.) |
| கட்சி 1 | kaṭci n. prob. kakṣa. 1. Forest; jungle; காடு. கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினும் (மலைபடு. 235). 2. Refuge; 3. Bed, sleeping place; 4. Bird's nest; |
| கட்சி 2 | kaṭci n. <>kakṣyā. 1. Faction, party, clique; விவாதப்பட்ட பிரிவு. அவன் ஒருகட்சியிலும் சேராதவன். 2. Battle-field; |
| கட்சிக்காரன் | kaṭci-k-kāraṉ n. <>id. +. 1. Partisan; விவாதப்பட்ட பிரிவான். 2. Client; 3. Plaintiff or defendant in a case; |
| கட்சிகட்டு - தல் | kaṭci-kaṭṭu- v. intr. <>id. +. To set up a faction for a quarrel; ஒன்றன் பொருட்டு முரணிநிற்றல். |
| கட்சியார் | kaṭciyār n. <>id. Members of a faction; விவாதப்பட்ட ஒரு சாரார். |
| கட்செவி | kaṭ-cevi n. <>கண் + செவி. 1. Snake, its eyes being considered to serve both as the sensory organ of sight as well as of hearing; பாம்பு. மலைமுழையிற் கட்செவி (கம்பரா. படைத்தலை. 42). 2. The ninth nakṣatra. See ஆயிலியம். |
| கட்டக்கசப்பு | kaṭṭa-k-kacappu n. Redupl. of கச-. Extreme bitterness of taste; கடுங் கசப்பு. Loc. |
| கட்டக்கீச்சான் | kaṭṭa-k-kīccāṉ n. A seafish, silvery with lateral bands, attaining at least 10 in. in length, Therapon theraps; சிறு கடல்மீன் வகை. |
| கட்டக்குடி | kaṭṭa-k-kuṭi n. <>kaṣṭa +. Family in distress, in want; கஷ்டப்படும் குடும்பம் (ஈடு, 2,2, 3.) |
| கட்டகம் | kaṭṭakam n. <>கட்டு+அகம். 1. Artistic design; சித்திரவேலைப்பாடு. பத்தி பயின்ற கட்டகக் கம்மத்து (பெருங். உஞ்சைக்.38, 146). 2. Loadstone, magnet; |
| கட்டங்கம் | kaṭṭaṅkam n. <>Pkt. khaṭṭanga <> khaṭvānga. Battle-axe of šiva; மழுவாயுதம், சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ் சூழ் (திருக்கோ. 242). |
| கட்டங்கன் | kaṭṭaṅkaṉ n. <>id. šiva who carries a battle-axe; சிவன், காபாலி கட்டங்கன் (தேவா, 769, 5). |
| கட்டடக்களவு | kaṭṭaṭa-k-kaḷavu n. <>கட்டடம்+. Theft in a building; வீட்டிலுள்ள பொருளைத் திருடுகை. (C.G.) |
| கட்டடங்க | kaṭṭaṭaṅka adv. <>கட்டு+அடங்கு-. Entirely, wholly; முழுதும். கட்டடங்க இவனையே சொல்லுகையாலே (ஈடு, 3, 4, 6 ). |
| கட்டடம் | kaṭṭaṭam n. <>கட்டு-.[T. kaṭṭadamu.] 1. Building; வீடு முதலிய கட்டடம். 2. Binding of a book; 3. Setting of a jewel, enchasement; |
