
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத த்ருதீயோ அத்யாய:। கர்மயோகம்(வாழ்க்கையே யோகம்) |
அர்ஜுன உவாச। |
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந। தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஷவ॥ 3.1 |
ஜனார்த்தனா ! கேசவா ! செயலைவிட ஞானம் சிறந்தது என்பது உனது கருத்தானால் பயங்கரமான செயலில் ஏன் என்னை ஏவுகிறாய் ?
வ்யாமிஷ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே। ததேகம் வத நிஷ்சித்ய யேந ஷ்ரேயோ அஹமாப்நுயாம்॥ 3.2 |
முரண்படுகின்ற வார்த்தைகளால் எனது அறிவை குழப்புகிறாய் போலும். எது எனக்கு நன்மை தருமோ அந்த ஒன்றை எனக்கு உறுதியாக சொல்.
ஸ்ரீபகவாநுவாச। |
லோகே அஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக। ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்॥ 3.3 |
ஸ்ரீ பகவான் கூறினார்: பாவமற்றவனே ! இந்த உலகில் இரண்டு நெறிகளை முன்பே நான் போதித்து இருக்கிறேன். சாங்கியர்களுக்கு ஞான யோகம், யோகிகளுக்கு கர்ம யோகம்.
ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோ அஷ்நுதே। ந ச ஸம்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி॥ 3.4 |
வெறுமனே வேலை செய்யாமல் இருப்பதால் ஒருவன் செயல்களற்ற நிலையை அடைந்து விட மாட்டான். செயல்களை விட்டுவிடுவதால் யாரும் நிறைநிலையை அடைவதில்லை.
ந ஹி கஷ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்। கார்யதே ஹ்யவஷ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:॥ 3.5 |
யாரும் ஒரு கனபொழுதும் செயலில் ஈடுபடாமல் இருப்பதில்லை, ஏனெனில் ஒவ்வொருவரும் இயற்கையிலிருந்து தோன்றிய குணங்களால் ஏவப்பட்டு தன்வசம் இல்லாமல் செயலில் ஈடுபடுத்தபடுகிறார்கள்.
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்। இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே॥ 3.6 |
யார் கர்மேந்திரியங்களை அடக்கி பொருட்களை மனத்தில் நினைத்து கொண்டிருக்கிறானோ, அந்த மூடன் கபடன் என்று சொல்லபடுகின்றான்.