அதிகாரம் 1
2 அப்போது ஆண்டவர், "யூதா போகட்டும். இதோ, நாட்டை அவன் கைவயப்படுத்தினோம்" என்றார்.
3 யூதா தன் சகோதரன் சிமியோனிடம், "நீ என் பக்கம் இருந்து என்னுடன் கானானையரை எதிர்த்துப் போர் புரிய வா. நானும் உன் பக்கம் இருந்து உன் எதிரிகளை எதிர்ப்பேன்" என்றார். அப்படியே சிமியோனும் அவனோடு சென்றான்.
4 யூதா படையுடன் செல்லவே, கானானையரையும் பெரேனசயரையும் கடவுள் அவனுக்குக் கையளித்தார். அவர்கள் பெசேக் நகரில் பதினாயிரம் பேரைக் கொன்றனர்.
5 பெசேக்கில் அதொனிபெசேக்கையும் கண்டு அவனையும் எதிர்த்துக் கானானையரையும் பெரேசையரையும் முறியடித்தனர்.
6 அதொனிபெசேக் ஓடிப்போக, அவனை விரட்டிப் பிடித்து அவன் கைகால் விரல் நுனிகளைத் துண்டித்தனர்.
7 அதொனிபெசேக், "எழுபது அரசர்கள் கைகால் விரல் நுனிகள் துண்டிக்கப்பட்டு என் மேசையிலிருந்து சிந்தினவற்றை உண்டனர். நான் பிறருக்குச் செய்துள்ளபடியே இறைவனும் எனக்குச் செய்துள்ளார்" என்றான். அவர்கள் அவனை யெருசலேமுக்குக் கொணர்ந்தனர். அவன் அங்கே இறந்தான்.
8 யூதாவின் மக்கள் யெருசலேம் நகரைத் தாக்கி அதைப் பிடித்தனர். மக்களை வாளால் வெட்டி நகர் முழுவதையும் தீக்கு இரையாக்கினர்.
9 அதன்பின் அவர்கள் போய், மலைப்பகுதிகளிலும் தெற்குப்புற ஊர்களிலும், சமவெளிகளிலும் வாழ்ந்து வந்த கானானையரோடு போர்தொடுத்தனர்.
10 பிறகு பழைய காரியாத் அர்பே என்ற எபிரோனில் வாழ்ந்து வந்த கானானையரை எதிர்த்துச் சென்று செசாயி, அயிமான், தோல்மாயி என்பவர்களை யூதா வென்றான்.
11 அங்கிருந்து புறப்பட்டு, காரியத்சேபேர், அதாவது கல்விமாநகர் என்ற பழம் பெயர் கொண்ட தாபிரின் குடிகளைத் தாக்கினான்.
12 அப்போது காலேப், "காரியாத்சேபேர் நகரைப் பிடித்து அழிப்பவனுக்கு அக்சாம் என்ற என் மகளை மணமுடித்துக் கொடுப்பேன்" என்றான்.
13 காலேபின் தம்பி செனேசின் மகன் ஒத்தேனியேல் அந்நகரை பிடிக்கவே, அக்சாம் என்ற தன் மகளைக் காலேப் அவனுக்கு மணமுடித்து வைத்தான்.
14 அவள் பயணம் போகையில் அவள் கணவன் அவளை நோக்கி, அவள் தந்தையிடம் ஒரு வயல் கேட்கும்படி தூண்டினான். அவள் கழுதை மேலமர்ந்து பெரு மூச்சுவிட்ட போது காலேப் அவளிடம், "என்னவேண்டும்?" என்று கேட்டான்.
15 அவளோ, "எனக்கு உமது நல்லாசி வேண்டும், வறண்ட நிலத்தை எனக்குத் தந்தீர்@ நீர்வளமான ஒரு நிலத்தையும் தாரும்" என்றாள். காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலுமிருந்து நீர் வளமுள்ள நிலத்தை அவளுக்குக் கொடுத்தான்.
16 மோயீசனின் உறவினனான சீனோயியின் மக்கள் யூதாவின் மக்களுடன் பனைமர ஊரிலிருந்து புறப்பட்டு அவனது பங்குக்குக் கிடைத்த ஆராத் ஊருக்குத் தெற்கேயுள்ள பாலைநிலத்திற்கு வந்து அங்குக் குடியேறினர்.
17 யூதா தன் சகோதரன் சிமியோனோடு சென்று, இருவரும் சேர்ந்து சேபாத் ஊரில் வாழ்ந்த கானானையர் மேல் பாய்ந்து அவர்களைக் கொன்றனர். அவ்வூருக்கு ஓர்மா அல்லது சாபம் என்ற பெயர் உண்டாயிற்று.
18 அதன் பிறகு, யூதா காஜாவையும் அதன் சுற்றுப்புறங்களையும், அஸ்காலோனையும், அக்காரோனையும் அதன் சுற்றெல்லைகளையும் கைப்பற்றினான்.
19 ஆண்டவர் தன் பக்கம் இருந்ததால் யூதா மலைநாடுகளைத் தனதாக்கிக் கொண்டான். ஆனால் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வந்தோரை அவன் அழிக்க முடியவில்லை. ஏனெனில் நீண்ட வாள் பொருத்தப்பட்ட தேர்கள் பல அவர்களுக்கு இருந்தன.
20 மோயீசன் கட்டளையிட்டபடி காலேபுக்கு எபிரோனைக் கொடுக்க, அவன் அதில் வாழ்ந்த ஏனாக்கின் மூன்று புதல்வரையும் அழித்தான்.
21 பெஞ்சமின் மக்கள் யெருசலேமில் வாழ்ந்த ஜெபுசேயரை அழிக்கவில்லை. ஜெபுசேயர் பெஞ்சமின் மக்களோடு யெருசலேமில் இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள்.
22 சூசையின் குடும்பமும் பேத்தல் ஊருக்குச் சென்றது. ஆண்டவரும் அவர்களோடிருந்தார்.
23 எப்படியென்றால் லூசா என்று முன்பு கூறப்பட்ட நகரை அவர்கள் முற்றுகையிட்ட போது,
24 அந்நகரினின்று வெளியேறின ஒரு மனிதனைக் கண்டு, அவனை நோக்கி, "நகருக்குள் நுழைய வழி காட்டினால், உன்னைக் காப்பாற்றுவோம்" என்றனர்.
25 அவன் வழி காண்பித்தான்@ அவர்கள் நகரை வாள்முனைக்குப் பலியிட்டனர். ஆனால் அவனையும் அவன் உறவினரையும் ஒன்றும் செய்யவில்லை.
26 அவனோ தப்பியோடி ஏத்திம் நாடு சென்று அங்கு ஒரு நகரைக் கட்டி எழுப்பி அதற்கு லூசா என்று பெயரும் இட்டான். அது இன்று வரை அப்படியே அழைக்கப்பட்டு வருகிறது.
27 மானோசேயும் பெத்சான், தானாக் நகர்களையும் சிற்றூர்களையும், தோர், ஜேபிளாம் மகேதோ நகர்க்குடிகளையும் சிற்றூர்களையும் அழிக்கவில்லை., கானானையரும் அவர்களோடு குடியிருக்கத் தொடங்கினர்.
28 இஸ்ராயேலரும் வலிமை பெற்ற பின்னர் அவர்களைத் தங்களுக்குக் கப்பம் கட்டச் செய்தனர்@ ஆனால் அவர்களை அழிக்கவில்லை.
29 எபிராயீமும் காசேரில் வாழ்ந்த கானானையரை அழிக்காது அவர்களுடன் வாழ்ந்தான்.
30 சபுலோன், கேத்திரோன், குடிகளையும் நாலோப் நகரையும் அழிக்கவில்லை@ ஆனால் கானானையர் அவனோடு வாழ்ந்து அவனுக்குக் கப்பங்கட்டி வந்தனர்.
31 ஆசேரும், ஆக்கோ, சீதோன், அலாப், அக்காசிப், எல்பா, ஆபெக், ரோகோப் நகரத்தாரைக் கொல்லாது,
32 அந்நாடுகளில் வாழ்ந்து வந்த கானானையர் மத்தியில் வாழ்ந்தான், அவன் அவர்களைக் கொல்லவில்லை.
33 நெப்தலியும், பெத்சாமெஸ், பெத்தானாத் ஊராரையும் அழிக்கவில்லை. அங்கு வாழ்ந்த கானானையருடன் அவனும் வாழ்ந்து வந்தான்@ பெத்சாமித்தாரும் பெத்தானித்தாரும் அவனுக்குக் கப்பங்கட்டி வந்தனர்.
34 அமோறையரோ தான் மக்களைச் சமவெளியில் இறங்க விடாது தடுத்து மலைகளிலேயே நெருக்கினர்.
35 அயலோன், சாலேபிமிலுள்ள ஆரோஸ் அதாவது களிமண் என்ற மலையில் வாழ்ந்து வந்தான். சூசை குடும்பத்தார் மிக்க வலிமையுற்ற போது அமோறையரைத் தங்களுக்குக் கப்பம் கட்டும்படி செய்தனர்.
36 அமோறையர் நாட்டின் எல்லைகளாவன: விருச்சிக மலையும் பேத்ரா மலைத்தொடரும் மேட்டு நிலமுமாகும்.