அதிகாரம் 5
2 இப்படியிருந்ததும் நீங்கள் இறுமாந்திருக்கிறீர்கள். ~மாறாக, துக்கம் கொண்டாடியிருக்க வேண்டும். இச்செயல் செய்தவனை உங்களிடையேயிருந்து அகற்றிவிட்டிருக்க வேண்டும்.
3 ஆனால், என் உடலால் உங்களை விட்டுப் பிரிந்தாலும், உள்ளத்தால் உங்களோடு தான் இருக்கிறேன். உங்களோடிருப்பது போல், நான் அத்தகைய செயல் செய்தவனுக்கு ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் ஏற்கனவே தீர்ப்பிட்டு விட்டேன்.
4 அதாவது நம் ஆண்டவராகிய இயேசுவின் வல்லமையைக் கொண்டவர்களாய் நீங்களும் என் உள்ளமும் கூடிவந்து,
5 அத்தகையவனைச் சாத்தானுக்குக் கையளிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் அவனது ஆன்மா ஆண்டவரின் நாளில் மீட்படையும்படி இவ்வாறு செய்வோம்.
6 நீங்கள் பெருமை பாராட்டுவது முறையன்று. சிறிதளவு புளிப்பு மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்கச் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியாதா?
7 நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும் படி பழைய புளிப்பு மாவை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் புளியாத அப்பமன்றோ? ஏனெனில், நமது பாஸ்காப் பலி நிறைவேறிவிட்டது. கிறிஸ்துவே அப்பலி.
8 ஆகையால், விழாக் கொண்டாடுவோம். அதில் பழைய புளிப்பு மாவைப் பயன்படுத்தலாகாது. தீயமனம், கெடுமதி என்னும் புளிப்பு மாவை விலக்கி நேர்மை, உண்மை என்னும் புளியாத அப்பத்தையே உண்போம்.
9 காமுகரோடு உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று என் கடிதத்தில் உங்களுக்கு எழுதியிருந்தேன்.
10 உலகத்துக் காமுகர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், சிலை வழிபாட்டினர், இவர்களைக் குறித்து நான் பொதுவாகப் பேசவில்லை. அவர்களை விலக்கவேண்டியிருந்தால் நீங்கள் இவ்வுலகை விட்டே வெளியேற வேண்டியிருக்குமே.
11 நான் எழுதியதோ சகோதரன் என்னும் பெயரை வைத்துக் கொண்டு, காமுகனாகவோ, பேராசைக்காரனாகவோ, சிலை வழி பாட்டினனாகவோ, பழி பேசுபவனாகவோ, குடிகாரனாகவோ, கொள்ளைக்காரனாகவோ, இருக்கின்றவனைக் குறித்துத்தான். இத்தகையவனோடு எவ்வுறவும் வேண்டாம்@ அவனோடு உண்ணவும் வேண்டாம்.
12 திருச்சபையைச் சேராதவர்களுக்குத் தீர்ப்பிடுவது என் வேலையா? அவர்களுக்குக் கடவுள் தீர்ப்பிடுவார்,.
13 நீங்கள் தீர்ப்பிடுவது திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்கன்றோ? தீயவனை உங்களிடையேயிருந்து களைந்தெறியுங்கள்.