அதிகாரம் 16
2 ஞாயிறுதோறும் உங்களுள் ஒவ்வொருவனும் தனது வரவுக்கேற்றவாறு சேமித்து வைக்கட்டும்@ நான் வந்த பிறகு தண்டல் செய்யத் தொடங்க வேண்டாம்.
3 நான் வரும்போது நீங்கள் யாரைத் தகுதியுள்ளவர்கள் எனக் குறிப்பிடுவீர்களோ அவர்களிடம் அறிமுகக் கடிதம் கொடுத்து, உங்கள் நன்கொடையை யெருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.
4 நானே அதை நேரில் எடுத்துச்செல்வது தக்கது என்று தோன்றினால், அவர்கள் என்னோடு வரட்டும்.
5 மக்கெதோனியா வழியாகப் பயணம் செய்ய எண்ணியிருக்கிறேன். அந்த நாட்டைக் கடந்தபின், உங்களிடம் வருவேன்.
6 ஒருவேளை நான் உங்களோடு தங்கலாம். குளிர்காலத்தை அங்கே கழிக்கவும் நேரலாம்@ இவ்வாறு நான் போகுமிடத்திற்கெல்லாம் நீங்களே என்னை வழியனுப்புவீர்கள்.
7 போகிற போக்கில் உங்களைப் பார்த்துவிட்டுப் போக எனக்கு மனமில்லை. ஆண்டவர் திருவுளங்கொண்டால், உங்களோடு சிறிது காலம் தங்கியிருப்பேன்.
8 பெந்தெகொஸ்தே திருநாள் வரை எபேசு நகரில் தங்கியிருப்பேன்.
9 பயன் நிறைந்த பணியாற்ற நல்ல வாய்ப்பு அங்கே இருக்கிறது@ பகைவரும் பலர் இல்லாமலில்லை.
10 தீமோத்தேயு வந்தால், உங்களால் அவருக்கு எவ்விதக் கவலையும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்@ ஏனெனில் அவரும் என்னைப்போல் ஆண்டவரின் வேலையைத்தான் செய்கிறார்.
11 யாரும் அவரை இழிவாக எண்ணக் கூடாது@ அவர் அங்கிருந்து என்னிடம் திரும்பி வரும்போது அன்போடு அனுப்பிவையுங்கள்@ நானும் சகோதரர்களும் அவருக்காகக் காத்திருக்கிறோம்.
12 நம் அப்பொல்லோவைப்பற்றிக் கேட்டீர்களே, அவர் சகோதரர்களுடன் உங்களிடம் வரும்படி மிகவும் கேட்டுக்கொண்டேன்@ ஆனால் இப்பொழுது வர அவருக்கு மனமே இல்லை@ வாய்ப்புக் கிடைக்கும்பொழுது வருவார்.
13 விழித்திருங்கள், விசுவாசத்தில் நிலைத்திருங்கள், ஆண்மையுடன் நடந்துகொள்ளுங்கள்,
14 மன வலிமை காட்டுங்கள்,. உங்கள் வாழ்வு அன்பு மயமாய் அமையட்டும்.
15 சகோதரர்களே, இன்னுமொரு வேண்டுகோள்: ஸ்தேபனாவின் வீட்டாரை நீங்கள் அறிவீர்கள்,. அவர்கள் தாம் அக்காயா நாட்டின் முதற்கனி@ இறைமக்களுக்குப் பணிபுரியத் தங்களையே கையளித்தனர்.
16 இத்துணை நல்லவர்களையும் இன்னும் அவர்களுடன் சேர்ந்து உழைக்கும் எல்லாரையும் உங்கள் தலைவர்களென மதியுங்கள்.
17 ஸ்தேபனா, பொர்த்துனாத்து, அக்காயிக்கு ஆகியோர் வந்தது எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் இங்கில்லாத குறையை அவர்கள் நீக்கினார்கள்.
18 என் உள்ளத்தையும் உங்கள் உள்ளத்தையும் கூடக் குளிரச்செய்தார்கள்@ இத்தகைய நன்மக்களைப் பாராட்டுங்கள்.
19 ஆசிய நாட்டுச் சபைகள் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன@ ஆக்கிலாவும் பிரிஸ்காளும், இவர்களது வீட்டில் கூடுகின்ற சபையினரும் ஆண்டவருக்குள் உங்களுக்கு வாழ்த்துப் பல கூறுகிறார்கள். சகோதரர் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்@
20 நீங்களும் பரிசுத்த முத்தங்கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்.
21 இவ்வாழ்த்து சின்னப்பனாகிய நான் என் கைப்பட எழுதியது.
22 ஆண்டவரை நேசிக்காதவன் சபிக்கப்படுக. ~ மாரனாதா, ~ ஆண்டவரே வருக.
23 ஆண்டவராகிய இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!
24 கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் அனைவருக்கும் என் அன்பு.