7. மாலத்தீவுகளுக்கு எதிராக மேற்கொண்ட கடற்படையெடுப்பே முதலாம் ராஐராஜனின் இறுதிபடையெடுப்பாகும். மாலத்தீவுகள் கைப்பற்றப்பட்டன.
முதலாம் ராஜராஜனின் இத்தகைய போர்வெற்றிகளினால் சோழப்பேரரசு தமிழ்நாட்டில் சேர, பாண்டிய, தொண்டை மண்டலப் பகுதிகளையும், தக்காணத்தில் கங்கபாடி, நுளம்பபாடி, தெலுங்குச் சோடர்களின் ஆட்சிப்பகுதி, வடக்கு இலங்கை, மாலத்தீவுகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. மும்முடிசோழன், ஜெயங்கொண்டான், சிவபாத சேகரன் போன்ற விருதுப் பெயர்களையும் முதலாம் ராஐராஜன் குட்டிக் கொண்டான். சிறந்த சிவபக்தனாகவும் அவர் விளங்கினார். கி.பி. 1010ல் தஞ்சையில் பிரகதீஸ்வரம் என்றழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டிமுடித்தார். நாகப்பட்டினத்தில் புத்த மடாலயம் கட்டுவதற்கும் அவர் உதவிகளை வழங்கினார்.
முதலாம் ராஜேந்திரன் (கி.பி. 1012 - 1044)
![]() |
ராஜேந்திரன் I |
1. சோழர்களிடமிருந்து வடக்கு இலங்கையை கைப்பற்ற இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் முயற்சி செய்தான். ராஜேந்திரன் மீண்டும் அவனை முறியடித்து தெற்கு இலங்கையையும் கைப்பற்றிக் கொண்டார். இதனால் இலங்கை முழுவதுமே சோழப் பேரரசில் இணைக்கப்பட்டது.
2. சேர, பாண்டிய ஆட்சிப் பகுதிகளில் மீண்டும் சோழ ஆதிக்கத்தை உறுதிப்படுத்தினார்.
3. மேலைச் சாளுக்கிய அரசன் ஜெயசிம்மனை மீண்டும் முறியடித்தான். சோழ-சாளுக்கிய எல்லையாக துங்கபத்திரை நதி அங்கீகரிக்கப் பட்டது.
4. முதலாம் ராஜேந்திரனின் புகழ் வாய்ந்த படையெடுப்பு அவர் வடஇந்தியாவின்மீது மேற்கொண்டதாகும். வழியில் பல ஆட்சியாளர்களை முறியடித்த சோழப் படை கங்கை நதியைக் கடந்து சென்றது. வங்காள அரசன் முதலாம் மகிபாலனை முதலாம் ராஜேந்திரன் முறியடித்தான். தமது வடஇந்தியப் படையெடுப்பின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரை நிர்மாணித்து அங்கு புகழ்வாய்ந்த ராஜேஸ்வர ஆலயத்தையும் அவர் எழுப்பினார். அந்நகரின் மேற்குப்புறத்தில் சோழகங்கம் என்ற நீர்ப்பாசன ஏரியையும் வெட்டுவித்தான்.