
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத காதஷோ அத்யாய:। விஷ்வரூபதர்ஷந யோகம்(வாழ்க்கையின் மறுப்பக்கம்) |
அர்ஜுன உவாச। |
மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம்। யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோ அயம் விகதோ மம॥ 11.1 ॥ |
அர்ஜுனன் கூறினான்: மேலான, ரகசியமான ஆத்மதத்துவத்தை பற்றி நீ கூறியருளியதால் எனது மனமயக்கம் போய்விட்டது.
பவாப்யயௌ ஹி பூதாநாம் ஷ்ருதௌ விஸ்தரஷோ மயா। த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம்॥ 11.2 ॥ |
தாமரை இதழ் போன்ற கண்களை உடையவனே ! உயிர்களின் பிறப்பு இறப்பு பற்றியும் உனது எல்லையற்ற மகிமை பற்றியும் உன்னிடமிருந்தே நான் விரிவாக தெரிந்துகொண்டேன்.
ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஷ்வர। த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஷ்வரம் புருஷோத்தம॥ 11.3 ॥ |
பரமேசுவரா ! நீ உன்னை பற்றி சொன்னவை அனைத்தையும் அப்படியே உண்மை. புருஷோத்தமா ! இனி உனது தெய்வ வடிவை நான் காண விரும்புகிறேன்.
மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ। யோகேஷ்வர ததோ மே த்வம் தர்ஷயாத்மாநமவ்யயம்॥ 11.4 ॥ |
எம்பெருமானே ! யோகேசுவரா ! அந்த தெய்வ வடிவத்தை காண நான் தகுதி பெற்றவன் என்று நீ கருதினால் அழிவற்ற அந்த உனது வடிவை எனக்கு காட்டி அருள்வாய்.
ஸ்ரீபகவாநுவாச। |
பஷ்ய மே பார்த ரூபாணி ஷதஷோ அத ஸஹஸ்ரஷ:। நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச॥ 11.5 ॥ |
அர்ஜுனா ! பலவிதமான, தெய்வீகமான பல நிறங்களும், வடிவங்களும் உடைய எனது உருவங்களை நூற்றுக்கணக்காக ஆயிரக்கணக்காக பார்.