
உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:। யோ லோகத்ரயமாவிஷ்ய பிபர்த்யவ்யய ஈஷ்வர:॥ 15.17 ॥ |
யார் மூன்று உலகங்களை வியாப்பித்து அவற்றை தாங்குகிறாரோ அவர் அழிவற்றவரும் தலைவரும் பரமாத்மா என்றும் சொல்லபடுபவருமான மேலான புருஷர் ஆவார். நிலையற்றவை, நிலையானவன் இருவரிலிருந்தும் வேறானவர் இவர்.
யஸ்மாத்க்ஷரமதீதோ அஹமக்ஷராதபி சோத்தம:। அதோ அஸ்மி லோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம:॥ 15.18 ॥ |
நான் எந்த காரணத்தால் நிலையற்றதை கடந்தவனோ, நிலையானதற்கும் மேலானவனோ அந்த காரணத்தால் உலகத்திலும் வேதங்களிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.
யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதிபுருஷோத்தமம்। ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத॥ 15.19 ॥ |
அர்ஜுனா ! யார் இவ்வாறு மனமயக்கம் இல்லாதவனாக புருஷோத்தமன் என்று என்னை அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவனாக என்னை முழுமனத்துடன் வழிபடுகிறான்.