
த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸர்வமிதம் ஜகத்। மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம்॥ 7.13 ॥ |
இந்த எல்லா உலகமும் மூன்று குணங்களாகிய பொருட்களால் மதிமயங்கி, இவற்றிக்கு மேலானவனாகவும் அழிவற்றவனாகவும் இருக்கின்ற என்னை அறிவதில்லை.
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா। மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே॥ 7.14 ॥ |
குணங்களால் ஆன இந்த எனது மாயை தெய்வீகமானது. கடக்க முடியாதது. ஆனால் யார் என்னையே சரணடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையை கடக்கிறார்கள்.
ந மாம் துஷ்க்ருதிநோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:। மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பாவமாஷ்ரிதா:॥ 7.15 ॥ |
தீயவர், மூடர், இழிந்தவர், மனமயக்கத்தால் அறிவிழந்தவர், அசுர இயல்பினர் ஆகியோர் என்னை நாடுவதில்லை.
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோ அர்ஜுன। ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப॥ 7.16 ॥ |
பரத குலத்தில் சிறந்தவனான அர்ஜுனா ! துன்பத்தில் வாடுபவன், அறிவை நாடுபவன், பொருளை தேடுபவன், உண்மையை அறிந்தவன் என்று நான்கு விதமான நல்லவர்கள் என்னை வழிபடுகிறார்கள் .
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஷிஷ்யதே। ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ அத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய:॥ 7.17 ॥ |
அவர்களுள், என்றென்றும் என்னை நாடி ஒருமனதாக பக்தி செய்கின்ற ஞானி சிறந்தவன். ஏனெனில் உண்மையை அறிந்த அவனுக்கு நான் மிகவும் பிரியமானவன், அவனும் எனக்கு பிரியமானவன்.
உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்। ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்॥ 7.18 ॥ |
இவர்கள் எல்லோரும் நல்லவர்களே . ஆனால் உண்மையை அறிந்தவனும் நானும் சமமே. இது எனது கருத்து. ஏனெனில் மனம் நிலைபெற்ற அவன் மிக மேலான கதியாகிய என்னையே சார்ந்து இருக்கிறான்.