
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத ஸப்தமோ அத்ய। ஞான விஞ்ஞான யோகம்(எங்கும் இறைவன்) |
ஸ்ரீபகவாநுவாச। |
மய்யாஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந்மதாஷ்ரய:। அஸம்ஷயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு॥ 7.1 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! என்னிடம் மனத்தை வைத்து என்னை சார்ந்து, யோகத்தில் ஈடுபட்டு, என்னை சந்தேகத்திற்கு இடமின்றி எப்படி முற்றிலுமாக அறிவது என்பதை சொல்கிறேன் கேள்.
ஜ்ஞாநம் தே அஹம் ஸவிஜ்ஞாநமிதம் வக்ஷ்யாம்யஷேஷத:। யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோ அந்யஜ்ஜ்ஞாதவ்யமவஷிஷ்யதே॥ 7.2 ॥ |
விஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை நான் உனக்கு முழுமையாக கூறுகிறேன். இதை அறிந்தால் மேலும் அறிவதற்கு எதுவும் பாக்கியிருக்கிறது.
மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித்யததி ஸித்தயே। யததாமபி ஸித்தாநாம் கஷ்சிந்மாம் வேத்தி தத்த்வத:॥ 7.3 ॥ |
ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் இறை நிலைக்காக முயல்கிறான். அவர்களிலும் யாரோ ஒருவன் தான் என்னை உள்ளது உள்ளபடி அறிகிறான்.
பூமிராபோ அநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச। அஹம்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா॥ 7.4 ॥ |
மண், நீர், தீ, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அகங்காரம் என்று இந்த எட்டு விதமாக பிரித்திக்கின்ற சக்தி என்னுடையதே.
அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்। ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்॥ 7.5 ॥ |
ஆனால், பெருந்தோள் உடையவனே ! இது சாதாரண சக்தி இதிலிருந்து வேறானதும் வாழ்க்கைக்கு ஆதாரமானதுமான எனது மேலான சக்தியை அறிவாயாக . அதனால் தான் இந்த உலகம் தாங்கபடுகிறது.
ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய। அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா॥ 7.6 ॥ |
எல்லா உயிர்களும் இந்த இரண்டு சக்தியிலிருந்தும் தோன்றியவை என்று அறிந்துகொள். பிரபஞ்சம் முழுவதின் தோற்றத்திற்கும், அதுபோலேவே ஒடுக்கத்திற்கும் நானே காரணம்.