॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத த்வாதஷோ அத்யாய:। பக்தி யோகம்(பக்தி செய்) |
அர்ஜுன உவாச। |
ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே। யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா:॥ 12.1 ॥ |
அர்ஜுனன் கேட்டது : எப்போதும் யோகத்தில் நிலைத்திருந்து உன்னை வழிபடுபவர்கள், புலன்களால் அறிய முடியாத அழிவற்ற பிரம்மத்தை நாடுபவர்கள் – இவர்களுள் யோகத்தை நன்றாக அறிந்தவர்கள் யார் ?
ஸ்ரீபகவாநுவாச। |
மய்யாவேஷ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே। ஷ்ரத்தயா பரயோபேதா: தே மே யுக்ததமா மதா:॥ 12.2 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: மனத்தை என்னிடம் வைத்து, யோக பக்தியில் நிலைபெற்று, மேலான சிரத்தையுடன் யார் என்னை வழிபடுகிறார்களோ அவர்கள் மேலான யோகிகள் என்பது எனது கருத்து.
யே த்வக்ஷரமநிர்தேஷ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே। ஸர்வத்ரகமசிம்த்யம்ச கூடஸ்தம் அசலம்த்ருவம்॥ 12.3 ॥ ஸம்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தயா:। தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:॥ 12.4 ॥ |
புலன் கூட்டங்களை நன்றாக வசபடுத்தி, எல்லோரிடமும் சமநோக்குடன் எல்லா உயிர்களுக்கும் நன்மையை விரும்பி, சொல்லால் விளக்க முடியாததும் எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு எட்டாததும், மாறாததும், அசைவற்றதும், நிலைத்ததும், அழிவற்றதுமான பிரம்மத்தை வழிபடுபவர்களும் என்னையே அடைகிறார்கள்.
க்லேஷோ அதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்தசேதஸாம்। அவ்யக்தாஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே॥ 12.5 ॥ |
நிர்க்குண பிரம்மத்தில் மனத்தை வைக்கின்ற அவர்களுக்கு முயற்சி அதிகம் வேண்டும். ஏனெனில் உடலுனர்வு உடையவர்களுக்கு நிர்க்குண பிரம்ம நெறி மிகவும் கடினமானதாகும்.
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸம்ந்யஸ்ய மத்பர:। அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே॥ 12.6 ॥ தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத்। பவாமி ந சிராத்பார்த மய்யாவேஷிதசேதஸாம்॥ 12.7 ॥ |
அர்ஜுனா ! யார் எல்லா செயல்களையும் எனக்கு அர்ப்பனித்துவிட்டு, என்னையே மேலான கதியாக கொண்டு, வேறெதையும் நாடாத யோகத்தால் என்னையே தியானித்து வழிபடுகிறார்களோ, என்னிடம் மனத்தை செலுத்துகின்ற அவர்கள் மரணம் நிறைந்ததான வாழ்க்கை கடலிலிருந்து நான் விரைவில் கரையேற்றுகிறேன்.